தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எவ்வாறு மீள ஒருங்கிணைந்து நாச வேலைகளில் ஈடுபடக் கூடும் என்பதனை இந்திய மத்திய அரசாங்கம் அறிந்து கொண்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
புலிகள் இந்தியாவில் மீள ஒருங்கிணைந்தால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து இந்தியா புரிந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஒருங்கிணைகிறார்கள், மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கிறார்கள் என்ற மாயை அனைத்து வழிகளிலும் இலங்கை அரசு ஏற்படுத்த முனைகிறது. இலங்கையில் நடைபெறும் அனைத்துப் உரிமைக்கான போராட்டங்களையும் புலிகளின் போராட்டங்களாக உருவகப்படுத்க முனையும் இலங்கை அரசு இதனூடாக சிங்கள மக்களையும் மாயைக்குள் வைத்திருக்க முனைகிறது. மறுபுறத்தில் இதற்கு ஆதரவாக பிரபாகரன் வாழ்கிறார் அவர் வெளியே வந்து போராட்டம் நடத்துவார் என்ற பிரச்சாரத்தை சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் முன்னெடுக்கின்றன.
தவிர, புலி இலச்சனையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்களையும் ஒன்று கூடல்களையும் நிகழ்த்துவதன் ஊடாக புலிகள் இன்னும் இருக்கிறார்கள் என்ற அரசின் பிரச்சாரங்களுக்கு ஆதரவாக இலங்கை அரச ஆதரவாளர்கள் புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் செயற்படுகின்றனர்.