இந்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் மீதான தடை விதிக்கப்பட்டுள்ளது.இத் தடை உத்தரவானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டு வருகிறது.
விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படுள்ள நிலையில் அரசுகளும் அரச ஆதரவாளர்களும் அந்த அமைப்பு இன்னும் செயற்பாட்டில் உள்ளதான விம்பம் ஒன்றை ஏற்படுத்த முனைகின்றனர். இதற்காக புலிகளின் கொடிகளையும் சின்னங்களையும் பல்வேறு அடையாளங்களையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இலங்கையை இராணுவ மயப்படுத்துவதற்கும் இலங்கை உட்பட ஏனைய நாடுகள் மக்கள் மீதான ஒடுக்குமுறையை வலுப்படுத்தவும் இது அவர்களுக்குத் துணைபுரிகிறது.