Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை.

இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு மட்டும் 16 ஆயிரத்து 196 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின் றனர் என தேசிய குற்றவியல் பதிவு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்கொலை வளையமாக கருதப்படுகிற 5 மாநிலங்களான மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நா டகம், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 10 ஆயிரத்து 797 ஆகும். 2008-ம் ஆண்டில் நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட எண்ணிக் கையில், 66.6 சதவீத தற் கொலைகள் இந்த 5 மாநிலங்களில் நடந்துள்ளன.

கடந்த 2007-ம் ஆண்டு (66.2 சதவீதம்) அளவைக் காட்டிலும் இது சற்று கூடுதலாகும்.

விவசாயிகள் தற்கொலையில் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 3,802 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆந்திரா மற்றும் கர்நாடகம் என இரு மாநிலங்களிலும் ஏற்பட்ட விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையை விட மகாராஷ்டிரா விவசாயிகள் மரணம் 40 குறைவாகும். 2008-ம் ஆண்டில் நாட்டில் இறந்த 16 ஆயிரத்து 196 விவசாயிகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டை (2007) காட்டிலும் 436 குறைவாகும்.

கடந்த 1997-ம் ஆண்டு முதல் இதுவரை 1 லட்சத்து 99 ஆயிரத்து 132 விவசாயி கள் தற்கொலை செய்துள்ளனர்.

கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு விவசாயி வீதம் தற்கொலை செய்து வருகிறார். விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை ஆந்திரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் மிக கூடுதலாக உள்ளது.

இம்மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 604 ஆக உள்ளது. கடந்த 1997 முதல் 2002-ம் ஆண்டு வரை தற்கொலை மிகுந்த மேற்குறிப்பிட்ட 5 மாநிலங்களில் 55 ஆயிரத்து 769 விவசாயிகள் தற்கொலை செய்தனர். 2003-2008 கால கட்டத்தில் இம் மாநி லங் களில் 67 ஆயிரத்து 54 விவசாயிகள் தற்கொலை செய் தனர். சராசரியாக ஆண் டுக்கு 1900 விவசாயிகள் கூடுதலாக தற்கொலை செய் துள்ளனர்.

கடந்த 12 ஆண்டுகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 41 ஆயிரத்து 404 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

Exit mobile version