12.01.2009.
இன்று வரதட்சணை நாடு முழுக்க பரவி பெரும் நோயாக மாறி, பல உயிர்களை பலியெடுத்து வருகிறது. இந்திய மலைவாழ் மக்களிடம் இம்மாதிரியான பழக்கவழக்கங்கள் முன்பு இல்லை. ஆனால் சுத்தமான மலை காற்றாக இருந்த இவர் களிடமும் கலப்படம் மிகுந்த காற்றாய் பரவி வரதட்சணை தலை நிமிர்ந்து நிற்கிறது.
1970 களில் வரதட்சணை நிலவரம் 22 சத வீதமாகவும், 1980ல் 36 சதவீதமாகவும் இருந் தது. தற்பொழுது 100 சதமாக உயர்ந்துள்ள தாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. அதே வேளையில் பெண்கள் மீதான வரதட் சணை தொடர்பான தாக்குதல்களும் அதி கரித்துள்ளன.
1995ம் ஆண்டின் கணக்கெடுப்புப் படி இந்தியாவில் ஆண்டுக்கு 5,000 முதல் 9,000 வரையிலான வரதட்சணைக் கொலைகள் சராசரியாக நடப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக் கின்றது. குஜராத் மாநிலத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 13 பேர் மீது வரதட்சணை படுகொ லைகள் நடப்பதாக புள்ளி விவரம் தெரிவிக் கிறது. இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு வரதட்சணை படுகொலை நடத்தப்படு கிறது. 1989 முதல் 1991 வரை 18,000 பெண் கள் வரதட்சணைக் கொடுமையால் தீக்கிரை யாக்கப்பட்டுள்ளனர். மாமியார் மற்றும் கணவனின் சித்ரவதைக்குள்ளாகி 20,000 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
பண்டிகை காலங்களில் வரதட்சணைக் கொலைகள் அதிகமாக நிகழ்வதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பண்டிகை காலங் களில் பெண் வீட்டாரிடம் முறை, சீர் போன் றன கேட்டு செய்யப்படும் தொந்தரவுகள் இறுதியில் கொலையை நோக்கி செல்கிறது. அதே நேரத்தில் நீதிமன்றம் இம்மாதிரியான குற்றங்களில் வழங்கும் தண்டனைகள் அல் லது தீர்ப்புகள் குற்றங்களை தடுக்க உதவு வதில்லை என்பது நிதர்சனம்.
குறுக்கு வழியில் பணம் சேர்க்கும் ஏற் பாடாக திருமணங்கள் பார்க்கப்படுகிறது. இன்று பெங்களூர் போன்ற பெரிய ஹை-டெக் நகரங்களில் படித்த இளைஞர்கள், பெண்ணை திருமணம் செய்து ரூ.10 லட்சம் வரை அவள் மீது காப்பீடு செய்து, 6 மாதமோ அல்லது ஒரு வருடம் கழித்தோ அவளை கொலை செய்து, காப்பீட்டுத் தொகை பெறு வதாக ஓர் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது. நவீன வரதட்சணையின் போக்காக இன்றைய நிலை கொடூரத்தை நோக்கி நகர்கிறது.