இலங்கை அரசிற்கும் இந்திய அரசிற்கும் எதிரான முழக்கங்களுடன் லண்டனிலும் தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலை நரங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. லண்டனின் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் வேறுபட்ட அமைப்புக்கள் கலந்துகொண்டன. தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த லண்டன் வெஸ்ட்மினிஸ்டரில் நடைபெற்ற போராட்டத்தின் போது இலங்கை அரசின் இனவழிப்பைக் வெளிப்படுத்தும் துண்டுப்பிரசுரப் போராட்டம் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டது. புதிய திசைகள் அமைப்பு மேற்கொண்ட இந்தப் போராட்டத்தின் இறுதியில் ஆங்கிலத்திலும் தமிழிலும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. தமிழ் நாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் துணை அமைப்புக்களும் போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன. கொட்டும் மழையில் நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர். வேலூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு பின்னதாக விடுதலை செய்யப்பட்டனர். போராடும் சக்திகளின் இணைவு நம்பிக்கை தருவதாக புதிய திசைகள் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. போராட்டம் குறித்த ஏனைய ஒளிப்படங்கள் பின்னதாக இனியொருவிலும் ஏனைய ஊடகங்களிலும் பதிவுசெய்யப்படும்.