Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவின் ராஜபக்சேவான மோடியே தமிழகத்தில் நுழையாதே : தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டம்

mod_rajapakshaiலட்சக்கணக்கில் ஈழத் தமிழர்களை கொன்றொழித்து விட்டு ஈழத்தில் வளர்ச்சிப்பாதை என்று ராஜபட்சே கூறுவது போல ஈராயிரம் முசுலீம் மக்களை கொன்றொழித்து விட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக குஜராத் இருப்பது போன்ற மாயையை மோடியும் பிஜேபியும் ஏற்படுத்தி வருகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பிலும் சுகாதாரத்திலும் மிகவும் பின் தங்கிய நிலையில்தான் குஜராத் இருக்கிறது.

உண்மையில் 69% ரேசன் பொருட்கள் கடத்தி விற்கப்படுவதில் இந்தியாவில் முதல் மாநிலமாகவும், சுகாதாரத்துக்காக பட்ஜெட்டில் வெறும் 0.77 % ஒதுக்குவதிலும், 69.7% குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதிலும், 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரைவார்ப்பதிலும்தான் குஜராத் முன்னிலை வகிக்கிறது.

முதலாளிகளின் நலனுக்காகவே முன்னிறுத்தப்படும் இந்த மோசடியை அம்பலப்படுத்தும் வகையிலும் இந்தியாவின் ராஜபக்சேவான மோடியே தமிழகத்தில் நுழையாதே என்பதை வலியுறுத்தியும் எமது அமைப்புக்களின் சார்பில் 26.09.2013 அன்று காலை 11 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். நெடுஞ்செழியன் தலைமையேற்க உள்ளார். அதில் மாணவர்கள், பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

வ.கார்த்திகேயன்,
சென்னைக்கிளை இணைச்செயலர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
9445112675

மக்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி,  பெண்கள் விடுதலை முன்னணி  ஆகிய அமைப்புகளின் சென்னை மாவட்டக் கிளைகள் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி.

Exit mobile version