Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு சர்வதேச பொதுமன்னிப்பு சபை எதிர்ப்பு.

19.12.2008.

இந்தியாவில் பிரேரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் நாட்டு மக்களின் மனித உரிமைகளுக்கு ஊறுவிளைவிக்கும் என்று கூறி மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச பொதுமன்னிப்பு சபை (அம்னெஸ்டி) விமர்சித்துள்ளது.

பயங்கரவாத சந்தேகநபர்களுக்கு பிணை வழங்காமல் ஆறு மாத காலங்கள் வரையில் அடுத்துவைப்பதை புதிய விதிமுறை அனுமதிப்பதோடு பொலிசாருக்கு சோதனை நடத்துவதற்கு கூடுதல் அதிகாரங்களையும் புதிய சட்டம் வழங்கும்.

இந்திய நாடாளுமன்ற அவையில் இந்தப் புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்ட நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன் இச்சட்டம் அமலுக்கு வரும்.
BBC.

Exit mobile version