Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியர்கள் கருப்புப் பணம்- 72-லட்சம் கோடி.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதவாத பிஜேபி கட்சியால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சுவிஸ் வங்கில் இந்திய பணக்காரர்களால் வைக்கப்பட்டுள்ள பணம் குறீத்த பிரச்சாரம் ஒன்றூ முன் வைக்கப்பட்டது. சுமார் 72 லட்சம் கோடி அளவிலான கருப்புப் பணத்தை இந்திய முதலாளிகளும் பிரபலங்களும் சுவிஸ் வங்கியில் முடக்கியிருக்கிறார்கள்.

 இந்த ஆண்டு துவக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில் எமது வங்கியில் அதிக அளவு பணம் வைத்திருப்பவர்கள் இந்தியர்களே என்றது. இந்தப் பணத்தை மீட்க காங்கிரஸ் கட்சியோ, பிஜேபியோ மீட்க எந்த முயர்ச்சிய்யும் எடுக்காது என்பது பாமர இந்தியர்களுக்குத் தெரியும் ஏனென்றால் சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருக்கும் அதிகமாக நபர்கள் ஒன்றிலோ இக்கட்சிகளில் இருக்கிறார்கள். அல்லது இக்கட்சிகளுக்கு நிதி உதவி செய்பவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் சுவிஸ் வங்கியில் யார் யார்? கணக்கு வைத்திருக்கிறார்கள் என்ற விபரத்தை சுவிஸ் அரசிடன் கேட்டுள்ளதாக இந்திய நிதி அமைச்சர் ப்ரணாப்முகர்ஜி தெர்வித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள சுவிஸ் வங்கி “இந்திய   அரசு தனது நாட்டு டெலிபோன் டைரக்டரியை எங்களிடம் தந்து, அதில் உள்ளவர்களின் பெயரில் ரகசிய கணக்கு இருக்கிறதா என்று கேட்கலாம் என்று நினைத்தால், அது நடக்காது. அதை சுவிஸ் நாட்டு சட்டமும் அனுமதிக்காது.எனவே, ரகசிய கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை கேட்டு இந்தியா எங்களை அணுக வேண்டாம்” என்று கூறியுள்ளது சுவிஸ் வங்கி. அப்பாடா என்று நிம்மதியடைந்துள்ளார்கள் காங்கிரஸ்காரர்களும். பிஜேபியினரும்.

Exit mobile version