Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியப் பெண்களும் அரசியல் ஈடுபாடும்:மனோபினா குப்தா

சுமித்ரா மித்ரா 45 வருடங்களுக்கு மேலான காலத்திற்கு கம்மியூனிஸ்ராக இருந்து வருகிறார். அது அதனது தீவிரவாத ஆரம்ப நாட்களிலிருந்து இன்று 30 ஆண்டு காலப்பகுதியில் மேற்கு வங்காளத்தைப் பரிபாலிக்கும் நிலைக்கு வந்துள்ளமையைப் பார்த்து வந்துள்ளார்.

60 வயதான மித்ரா கொல்கத்தாவின் புறநகரப் பகுதியான கொன்னாகரிலிருந்து 2 முறை மியூனிசிப்பல் அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டவர். இத் தொகுதி தொழிலாள வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. ஒரு காலத்தில் வளம்மிக்க தொழில் நகரமாக விளங்கிய கொனாகரின் தொழிற்சாலைகள் அரசியல் அமைதியின்மையினாலும் 1960, 1970களில் இராணுவ ரீதியான தொழில் இயக்கங்களினாலும் மூடப்பட்டன.

மித்ரா கூறுவதாவது; உள்ளூர் சபைகளில் பெண்களுக்கு 33 வீதமான இடங்கள் ஒதுக்கப்பட்ட கொள்கையினால் நன்மையடைந்துள்ளவர்கள் நாங்கள். கொன்னாகரிலுள்ள 13 கோர்ப்பொறேற்றர்களில் 8 பேர் பெண்கள்.

இந்திய சட்ட அமைப்பில் 1993 இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மூலம் உள்ளூர் சபைகளில் இந்த உறுதியான கொள்கை இடம்பெற்றது. 2 ஆண்டுகள் கடந்த பின்னர் மேற்கு வங்காள அரசாங்கம் மியூனிசிப்பல் சபைகளில் பெண்களுக்கான உறுதியான பாகுபாட்டுக் கொள்கையை மேற்கொண்டது.

அது பெண்களுக்கு சாதகமான முறையில் அமைந்து அவர்களது குரல்கள் ஒலிக்க வழிவகுத்தது. ஆனால், நாம் இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்கிறார் மித்ரா.

பாலியலை அடிப்படையாகக் கொண்ட இடஒதுக்கீடு மாநில சபைகளிலோ இந்திய பாராளுமன்றத்திலோ மேற்கொள்ளப்படவில்லை. மித்ரா எச்சரிப்பதாவது; “நாங்கள் 33 வீத இடஒதுக்கீட்டிற்காக பாராளுமன்றத்தில் அடுத்த 10 ஆண்டு காலத்தில் வற்புறுத்த உள்ளோம்’.

பாராளுமன்ற மசோதா பாராளுமன்றத்திலும் மாநில அரசுகளிலும் பாலியல் ரீதியாக 33 வீத இடஒதுக்கீட்டிற்கு இடமளிக்கிறது. அதற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி இருந்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை. அது 13 ஆண்டுகளுக்கு முன் பிரேரிக்கப்பட்டது. “உண்மை யாதெனில் ஆண்கள் அது நிறைவேற்றப்படுவதை விரும்பவில்லை. ஆண்கள் தங்கள் இடங்களைப் பெண்களுக்குக் கொடுக்க வேண்டி ஏற்படும் என்பதால்’ என்கிறார் மித்ரா.

தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த மித்ரா அரசியற் போராட்டங்களுக்குப் பழக்கப்பட்டவர். அவரது அரசியல் வாழ்வு கனரன்றிக் மகில சமித்தியில் அதாவது கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவில் ஆரம்பித்தது.

அவர் ஞாபகப்படுத்துவதாவது; “1969இல் நான் சமித்தியில் பணியை ஆரம்பித்த போது என்னைச் சூழ அரசியல் பற்றிய அச்சுறுத்தல் இருந்தது. 1960, 1970களில் காங்கிரஸ் கட்சியைத் தலைமையாகக் கொண்ட ஸ்திரமற்ற அரசுகள் கம்யூனிஸ்டுகள் மீது தாக்குதல்களை நடத்தின’.

“இதுவும் இந்தியா தனது முதலாவது ஆயுதம் தரித்த நக்சால்களது புரட்சியை எதிர்கொண்ட போது காங்கிரஸாலும் நக்சல்களாலும் வெளிப்படுத்தப்பட்ட பயங்கரவாதங்களுக்கு இடையில் அகப்பட்டு வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டோம். குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் பொலிஸினதும் அரசியல் எதிரிகளது வன்முறைகளுக்குத் தப்ப தலைமறைவாக வேண்டிய நிலையையும் எதிர்கொண்டோம்’ என்கிறார் மித்ரா.

ஆனால் இடதுசாரி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தபின்னர், தீவிரவாத எதிர்க்கட்சியைச் சார்ந்ததனால் இருந்துவந்த ஆபத்து நீங்கியது. மித்ராவின் அரசியல் நடவடிக்கை வலுப்பெற்று 1995இல் கோனாகர் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாலியல் அடிப்படையாகக் கொண்ட உறுதியான செயற்பாடுகளினால் பயன்பெற்றவர் என்ற ரீதியில் பெண்களது வாழ்வில் ஏற்படுத்தப்பட வேண்டிய உறுதியான முன்னேற்றம், அதிகாரம் என்பவற்றில் அதிக நம்பிக்கை செலுத்தினார். மாவோ சேதுங்கின் வாக்கியத்தை ஆதாரமாகக் கொண்டு “பெண்களே ஆகாயத்தை பாதியளவு தாங்குகின்றனர்’ என்கிறார்.

உள்ளூர் சபைகள், பஞ்சாயத்துகள், மியூனிசிப்பல் சபைகள் ஆகியவற்றிற்குத் தெரிவு செய்யப்பட்ட பெண்களில் ஒரு மாறுபாடு தெரிகிறது. ஆண்களது முதற்தேவைகளிலிருந்து பெண்களது முதற்தெரிவுகள் வேறுபடுகின்றன. பெண்கள், பஞ்சாயத்து அங்கத்தவர்கள் தமது கவனத்தைப் பாடசாலைகள், ஆசிரியர்கள், குழாய்க் கிணறுகள், சுகாதார சேவைகள் ஆகிய சமூகத்தின் அத்தியாவசிய தேவைகளிற் செலுத்துகின்றனர்.

மேற்கு வங்காளத்திலும் இராஜஸ்தானிலும் உள்ள பஞ்சாயத்துகளில் பிரபல ஸ்தாபனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பெண்கள் தண்ணீர், வீதிகள் ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் அதிகளவு உட்கட்டமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்கின்றனர். பெண்கள் கிராம சபைகளில் ஒரு பெண்ணின் தலைமையில் அதிகளவு உற்சாகமும் ஆர்வமும் காட்டுகின்றனர்.

மித்ரா கூறுவதாவது; “எங்களது மியூனிசிப்பல் சபையில் நாங்கள் சுயதொழில் வாய்ப்பினை பெண்கள் உழைத்துச் சேமிக்க ஊக்கப்படுத்துகிறோம். இதனால் அவர்கள் ஆண்களைப் பணத்தேவைகளுக்காக நாடாது தம் சொந்தக் கால்களிலே நிற்கும் நிலையை ஊக்குவிக்கிறோம்’.

கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்தபின்னர், சுயதேவை பூர்த்தி குழுக்கள் எமது செயற்பாடுகளில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இதற்கு மித்ராவும் அவரது சகாக்களும் ஈடுபட்டுள்ளனர்.

தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதிகளில் பெண்கள் சுதந்திரமாக செயற்படுகிறார்கள். அவர்கள் எம்முடன் சுதந்திரமாகப் பழகித் தமது பிரச்சினைகளை சுயமாக வெளிப்படுத்துகிறார்கள் எனவும் கூறுகிறார்.

17 வயது மணப்பெண்ணாக இங்கு வந்த இந்த முயற்சிமிக்க அரசியற் தொழிலாளருக்கு பாரிய பிரதேசம் செயற்பட வேண்டியுள்ளது. ஆனால் செயற்பாடு கடினமானது. மேலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

2 வருடங்களுக்கு முன்னர் சி.பி.ஐ.எம். ஒரு தஸ்தாவேஜை கட்சியிலுள்ள ஆண்களுக்குக்கெதிரான முறைப்பாடாக முன்வைத்தது. கம்யூனிஸ்ற் குடும்பங்களில் பெண்களிடம் கவனிக்கப்பட்டு வந்த பழைய வழக்கங்களான தலையை மூடுவது, பர்தா அணிவது ஆகியவற்றை ஊக்கப்படுத்தக் கூடாது. மேலும் குடும்பத்தின் பிரதான பொறுப்பை ஏற்றுக்கொண்டு நடத்தல் வேண்டும் என்பன “பெண்களின் பிரச்சினைகளும் கடமைகளும்’ என தலையங்கமிடப்பட்ட முறைப்பாட்டில் அடங்கியிருந்தது.

ஒரு கட்டுப்பாடான சி.பி.ஐ.எம். கட்சியின் அங்கத்தவர் என்ற ரீதியில் மித்ரா தமது இயக்கத்தை மலினப்படுத்தும் ஆண்களைப்பற்றி எதுவுமே கூறவில்லை. ஆனால் அவர் கூறியதாவது; “நாங்கள் (பெண்கள்) இன்னும் பயணிக்க வேண்டிய நீண்டதூரம் உள்ளது’.

ஐ.பி.எஸ்.

Thanks:Thinakkural.

Exit mobile version