Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியப் பாதுகாப்பு : மீண்டும் மேனன்

இலங்கையில் வன்னி மக்கள் மீது நடத்தப்பட்ட போரில் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கிய இந்திய அரச அதிகாரிகளில் முதன்மையான சிலரில் ஷிவ்சங்கர் மேனனும் ஒருவர். இவர் வெளியுறவுச் செயலர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றிருந்தார்.
மறுபடி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சிவசங்கர் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன் ஓரிரு தினங்களில் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றி வந்த எம்.கே. நாராயணன், மேற்கு வங்க மாநில ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசியப் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்கென பாதுகாப்பு ஆலோசகர் பதவி கடந்த 1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதல் பாதுகாப்பு ஆலோசகராக பிரிஜேஷ் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஜே.என். தீட்ஷித் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

Exit mobile version