இந்திய அதிகார வர்க்கத்தின் இலங்கை மீதான பொருளாதார ஆக்கிரமிப்பு, பழங்குடி மக்கள் மீதான படுகொலை போன்று இன்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கையில் நடைபெறும் ஐபா திரைப்பட நிகழ்வுகள், உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. மிக முக்கிய நட்சத்திரங்களின் புறக்கணிப்பு ராஜபக்ச ஆட்சிக்கு மட்டுமல்ல இந்திய அதிகாரத்திற்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார ஆக்கிரமிப்பின் இன்னுமொரு முகம் பண்பாட்டு ஆக்கிரமிப்பாகும் என்கிறார் சொம்ஸ்கி.
இலங்கை சிங்களத் திரைப்படங்கள் பல சர்வதேச விருதுகளைப் பெற்றிருந்தன. மக்கள் சார்ந்த உயர் கலைப்படைப்புக்கள் பல உருவாகியிருந்தன. மார்டின் விக்கிரமசிங்க போன்ற படைப்பாளிகளோடு வளர்ந்த சிங்கள இலக்கியம், கலை, பண்பாடு போன்றன இந்திய ஹிந்தி சினிமாக் குப்பைகளால் ஆக்கிரகிக்கப்பட்டதன் உச்ச வடிவமே ஐபா நிகழ்வு.இந்தியாவின் திட்டமிட்ட இந்தப்பண்பாட்டு ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராட்டப் பாரம்பரியமுள்ள சிங்கள மக்கள் கிளர்ந்தெள வேண்டும். ஐபா என்பது ஆக்கிரமிப்பின் சின்னம்
-மல்ஷானி விக்கிரமசிங்க