05.08.2008.
சிறார்களை மோதல்களில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று இந்திய பாதுகாப்புப் படையினரையும், மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களையும் சர்வதேச செயற்பாட்டு அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரியுள்ளது.
இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் அனைத்துத் தரப்பினரும் சிறார்களை ஆயுத நடவடிக்கைகளில் பயன்படுத்துவதாக அது கூறுகிறது.
தாம் சிறாரை ஆட்சேர்ப்புச் செய்வதாகவும், சில சமயங்களில் 12 வயதுச் சிறாரைக் கூட ஆட்சேர்ப்புச் செய்வதாகவும் கிளர்ச்சிக்காரர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரச ஆதரவுடனான சல்வா ஜூடூம் ஆயுதக்குழுவினரும் சிறார்களைப் பயன்படுத்துவதாக அந்த மனித உரிமை அமைப்பு கூறுகிறது.
சிறாரை ஆட்சேர்ப்புச் செய்வதை அரசாங்கம் மறுக்கிறது
BBC.