Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியப் பங்கு சந்தையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி : தேசிய பொருளாதாரம் அழிகிறது

ஐரோப்பிய நாடுகளை அழிவுக்கு உள்ளாக்கிய உலக பங்கு சந்தை வியாபாரிகளுக்கு இந்திய அரசு இப்போது கதவைத் திறந்து விட்டுள்ளது. இந்திய மூலதனச் சந்தையை விரிவுபடுத்தவும், முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அன்னிய முதலீட்டை அதிகரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவிக்கின்றது. உலகின் வறிய நாடுகளில் ஒன்றான இந்தியாவை மேலும் சுரண்டலுக்கு உள்ளாக்குவதற்கு இது வழி வகுக்கும் என்பதே யதார்த்தம். ஏற்கனவே அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ள இந்திய ஏகாதிபத்தியப் பங்களார்கள் பல தேசிய நிறுவனங்களை அழித்துச் சிதைத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் குறிப்பிட்ட சில திட்டங்களில் 13 பில்லியன் டாலர் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) மூலம் அயல்நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதும் ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்தியத் தொழில் வளர்ச்சியை முற்றாக அழிக்கும் தன்மை வாய்ந்த இந்த நடவடிக்கைக்கு எதிராக தேசிய எழுச்சிகள் விரைவில் உருவாகலாம் என எதிர்வுகூறப்படுகின்றது.

Exit mobile version