Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியப்படைகள் : இலங்கை வருவது உறுதி?

எதிர்வரும் தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இந்திய பிரதமமந்திரிக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் இலங்கை வரவுள்ளன.
படையின் முதலாம் பிரிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று இலங்கை வரவுள்ளதாக இன்றைய லக்பிம ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமருக்கும் அந்த நாட்டின் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பளிக்கவென சுமார் மூவாயிரம் இந்திய துருப்புகள் இலங்கை வரவுள்ளன. இதில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று சுமார் 1000 துருப்பினர் இலங்கைக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்டத்துருப்பினர் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளனர். இறுதி கட்ட துருப்பினர் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு இந்தியப் போர்க்ப்பலின் மூலம் வரவுள்ளனர்.

இதனையடுத்து கொழும்பின் ஐந்து நட்சத்திர விருந்தகங்கள் இரண்டின் அறைகள் முழுமையாக இந்திய படையினருக்காக இரண்டு வாரங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு இந்திய துருப்பினரை ஏற்றி வரும் கப்பல் இந்தியர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குண்டுத்துளைக்காத வாகனங்கள் மற்றும் உலங்குவானூர்திகளும் இந்தியர்களுக்காக இந்தியாவில் இருந்தே கொண்டு வரப்படவுள்ளன.

இதற்கிடையில் சார்க் மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தானிய பிரதமருக்கு பாதுகாப்புக்காக அந்த நாட்டின் சுமார் 500 படையினர் வரை இலங்கைக்கு வரவுள்ளனர்.

அதேநேரம் ஆப்கானிஸ்தானிய தலைவருக்காக சுமார் 100 ஆப்கானிஸ்தானிய படையினர் வருகைதரவுள்ளனர்.

Exit mobile version