மேலும் உரையாற்றிய சம்பந்தன், இந்தியாவின் தலையீடு என்பது ஒரு தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாக எமது போராட்டத்தில் இடம்பெற்றது. எமது விருப்புக்கள் என்னவாக இருந்தாலும் இந்தியாவின் தேசிய நலன்களுக்கு ஒத்திசைவாக அமையாத எந்த ஒரு தீர்வையும் இலங்கைத் தீவில் பெற்றுவிடுவதை இந்தியா வரவேற்காது என்பதுவே இந்தியத் தலையீடு எமக்கு உணர்த்திய கட்டாயப் பாடமாக அமைந்தது என்றார்.
இந்தியத் தேசிய நலன் என்பது இந்தியாவில் வாழும் மக்களை ஒடுக்குவதிலிருந்து ஆரம்பமாகி அயல் நாடுகளில் இனப்படுகொலையைத் திட்டமிடுவது என்பது வரை நீண்டு செல்கிறது என்பதையும் சம்பந்தன் வசதியாக மறந்துவிடக் கோருகிறார்.
இந்தியத் தேசிய நலனும், சம்பந்தன் சார்ந்த அதிகார வர்க்கத்தின் நலனும், சிங்கள அதிகார வர்க்கத்தின் நலனும் ஒரு புள்ளியில் சந்திக்கிறது என்பதை சம்பந்தன் மக்களுக்கு அறிவித்திருக்கிறார்.
இந்த மூன்று நலன்களுக்கும் எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தின் நட்பு சக்திகள் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களும், சிங்கள உழைக்கும் மக்களும் என்பதை இரா.சம்பந்தன் சொல்லித் தருகிறார்.