Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கு உத்தரவு

இலங்கை இனப்பிரச்சனைக்கு “சர்வதேச அரசுகளை” நம்பியிராமல் இலஙகை அரசு அமைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றி இணக்கமான தீர்வைக் காணுமாறு இலங்கைகான இந்தியத் தூதுவர் அசோக் காந்தா வலியுறுத்தியுள்ளார். தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழிப்பதில் “சர்வதேசம்” என்று அழைக்கப்படும் உலகின் ஒடுக்குமுறை அரசுகள் அனைத்திலும் அதிகமாக இந்திய அரசே முனைப்புக்காட்டி வந்துள்ளது பல ஆயிரம் மக்களின் அழிவிற்கும் தேசியவிடுதலைப் போராட்டம் நிர்மூலமாக்கப்பட்டதற்கும் பிரதான சரவ்தேசக் காரணி இந்திய அரசே.
இன்று பல்தேசிய நிறுவனங்களின் நலனுக்காக இந்தியா முழுவதும் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும் வளங்கள் சுரண்டப்படுவதும் இந்திய அரசின் புதிய ஆக்கிரமிப்பு முகத்தை மக்களுக்கு கோரமாக அறிமுகப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக அழிக்கப்படக் கூடிய நிலையில் காணப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டத்தின் இருப்பு இந்திய அரசிற்குத் தேவையற்றுப் போனது. இதன் ஒரு பகுதியாக வன்னிப் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது. அதன் மறு பகுதி நில ஆக்கிரமிப்பும் வளங்களைச் சுரண்டுதலும் ஆகும். சிங்கள பௌத்த பேரினவாதம் நில ஆக்கிரமிப்பிற்குப் பொருத்தமானதாகக் கருதும் இந்திய அரசின் நட்பு சக்திகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மகிந்த ராஜபக்ச குடும்ப அரசும் இனம் காணப்பட்ட நிலையில் இந்திய அரசு இந்த இரண்டு சக்திகளதும் உள் முரண்பாட்டைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இலங்கை அரசிற்கும் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையேயான உள்முரண்பாடு பகை கொண்டதாகத் தோற்றமளிக்கும் நேச முரண்பாடு என்பதை இந்தியத் தூதுவர் வேறு வகையில் கூறியுள்ளார்.

Exit mobile version