Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியக் கோமாளி அரசியல் வாதிகள் இலங்கைக் கடலுக்குள் அனுமதிக்கக் கோருகிறார்கள்

fishermenஇலங்கை பேரினவாத அரசுகள் அரசியல் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிப்பதில் பல்வேறு வழிமுறைகளை கையாண்டுவந்தன. மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான மையங்களாக இந்தியாவும், புலம்பெயர் ஐரோப்பிய நாடுகளும் காணப்படுகின்றன. தமிழகத்தில் மீனவர்களின் பிரச்ச்சனைகளை முன்வைத்து தமிழக அரசியல் கட்சிகள் நடத்தும் கேலிக்கூத்து பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன.

இலங்கைக் கடலுக்குள் எல்லை தாண்டி நுளைந்து மீன்பிடிக்க உரிமை தருமாறு இன்று தமிழகத்தில் போராட்ங்கள் நடைபெறுகின்றன. சட்டவிரோதமாக தமது கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க உரிமை கோரும் கோமாளிகள் ஈழத்தமிழ் மீனவர்களைக் குறித்து சற்றும் சிந்தப்பதில்லை.

நேற்றைய தினம் மீனவ பிரதிநிதிகள் மற்றும் இலங்கை ஜனாதிபதிக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. இதன் போது எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவிற்கு எதிராக ஜனாதிபதியின் உருவப்பொம்மைகளை எரித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version