இந்திய மாலுமிகள் 15 பேருடன் பயணித்த பனாமா நாட்டுக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
சோமாலியா அருகே இந்தியப் பெருங்கடலில், எம்டி அஸ்பஹல்ட் வென்சர் என்னும் கப்பல் கென்ய துறைமுகம் மோம்பஸா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, மற்றொரு கப்பலில் வந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள் இந்த கப்பலை கடத்திச் சென்றனர்.
இத்தகவலை, கப்பல் நிறுவனமான எகோடெரா இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.