Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியக் கடற்படை திருகோணமலையில் இலங்கைப் படைகளுடன் கூட்டுப் பயிற்சி

warshipsமூன்று நாடுகள் கூட்டுப் பயிற்சிக்காக இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் திரிகோணமலையில் உள்ள கிழக்கு இலங்கை துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்தியா, மாலத்தீவு, இலங்கை ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
இந்திய கடலோர காவல் படை அதிகாரி ஜே.கே. வர்கீஸ் தலைமையில் “ஐசிஜீஎஸ் விஷ்வஸ்த்’ என்ற கப்பலும், மற்றொரு அதிகாரியான ஹெச்.ஜே. சிங் தலைமையில் “ஐசிஜீஎஸ் ராஜ்கமல்’ என்ற கப்பலும் இந்த கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இலங்கை இனப்படுகொலைக் கடற்படையை மேலும் பலப்படுத்தும் பயிற்சிகளும் ஆயுதங்களும் ஆதாரவும் உலகம் முழுவதுமுள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவ அதிகாரவர்க்கங்களும் அரசுகளும் நிபந்தனையின்றி வழங்கி வருகின்றன. இதன் பின்னணியில் இலங்கை அரசு இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டுவருகிறது.
இதற்கு இந்தியாவில் இருந்து 2 அதிநவீன கப்பல்கள் இலங்கைக்கு அனுப்பப்பட் டுள்ளன. அதிநவீன கருவிகளை கொண்ட இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல்களான விஷ்வாஸ், ராஜ்கமல் ஆகியவை இலங்கையின் திருகோணமலைத் துறைமுகத்தை அடைந்த போது இலங்கைக் கடற்படையினர் பெரும் வரவேற்பளித்தனர்.

Exit mobile version