உழைக்கும் மக்கள் பட்டினியோடு வாழும் கிரேக்கத்தில் கூட மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்பட்ட சமூக நலத் திட்டங்கள் அழிக்கப்படுகின்றன. இப்போது வரிப்பணம் நவ தாராளவாதத்தின் ஏகாதிபத்திக் கூறுகளான ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கி ஆகியவற்றினூடாகச் சுரண்டப்பட்டு பல்தேசியக் கூட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.பல்தேசி நிறுவனங்களின் வரி குறைக்கப்பட்டு உழைக்கும் மக்களின் வரி அதிகரிக்கப்படுகின்றது. இவற்றிற்கு எதிராகப் போராட முனைபவர்கள் அடக்கப்படுகிறார்க> கிரேக்கத்தின் முன்னுதரணத்தைப் பயன்படுத்தி இத்தாலியில் மக்கள் மீதான ஒடுக்குமுறை அதிகரித்துள்ளது. ஐரோப்பா முழுவது இந்த நிலை இன்னும் குறுகிய நாட்களுக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்ரது.
இத்தாலி பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சாத்தியங்கள் குறைவு : அழியும் ஐரோப்பிய ஒன்றியம்
