Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இத்தாலியில் ஆரம்பிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழிவு

euroஐரோப்பாவின் பிரதான பொருளாதார நாடுகளில் ஒன்றாகக்கருதப்பட்ட இத்தாலி அழிவின் விழிம்பிற்குள் சென்றுவிட்டது. நவதாரளவாத முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத நெருக்கடி இத்தாலியை அழித்துக்கொண்டிருக்கிறது. ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இத்தாலி, ஸ்பெயின் வரிசையில் அழிந்து சிதைந்து போகும் நிலைக்கு வேலையின்மையும், பொருளாதார நெருக்கடியும் முடிவின்றி அதிகரித்துச் செல்கின்றன.

எட்டாவது காலாண்டில் இத்தாலியின் பொருளாதாரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று வெளியிட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இத்தாலியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த வருடம் 0.6 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. 15 வயதிற்கிம் 24 வயதிற்கும் இடைப்பட்ட 40 வீதமானவர்கள் வேலையின்மையால் பாதிப்படைந்துள்ளனர். மொத்த சனத்தொகையில் 12.1 வீதமானவர்கள் வேலையற்றோராகக் காணப்படுகின்றனர்.
அண்மைய மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கையின் அடிப்படையில் பொருளாதார நெருக்கடியுடன் கூடிய தற்கொலைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 2013 இல் 40 வீதத்தால் அதிகரித்துள்ளது
இத்தாலியப் பொருளாதாரம் வங்கிகளுக்கு அடகுவைக்கப்பட்டுள்ளது. வங்கிகளூடாக இத்தாலிய மக்கள் உலகின் பெரும் பண முதலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் உத்தரவின் அடிப்படையிலேயே இத்தாலிய அரசு செயற்படுகிறது.

ஐரோப்பா முழுவதும் தவிர்க்க முடியாமல் இத்தாலியில் நிலையை நோக்கி நகர்த்தப்படுகின்றது.

Exit mobile version