Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இத்தாலியின் ஆத்மாவை ஜேர்மனியப் பிசாசிற்கு விற்றுவிட்டார்கள் : இத்தாலிய எதிர்க்கட்சித் தலைவர்

beppeமிகப் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள முதலாளித்துவப் பொருளாதார அமைப்பின் சந்தை வெறிக்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது. வங்கிப் பொருளாதாரத்தின் ஐரோப்பியத் தலைமைப் பகுதியை வகிக்கும் ஜேர்மனிய அரசும் அதனை இயக்கும் பல்தேசிய நிறுவனங்களும் வங்கிகளும் நெருக்கடிக்கு உள்ளாகும் நாடுகளின் மக்களை ஒட்டச் சுரண்டி பிச்சைக்காரர்கள் ஆக்கிவருகின்றன.

இத்தாலி எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான பீப்பே கிறீல்லோ ‘இத்தாலிய அரசியல் வாதிகள் மக்களை விலைபேசி இத்தாலியின் ஆத்மாவை ஜேர்மனியப் பிசாசுக்கு விற்றுவிட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதே இத்தாலியை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான ஒரே வழி எனத் தெரிவிக்கும் அவர் இத்தாலி யூரோவிலிருந்து லீராவிற்கு மீள்வதைத் தவிர வேறு வழிகளே இல்லை என்கிறார்.

மறுபுறத்தில் இத்தாலியில் ஏற்பட்டுவரும் புதிய அணிசேர்க்கைகளும் எழுச்சிகளும் முதலாளித்துவ நெருக்கடி என்பதே பிரச்சனையின் மூல காரணம் என்பதைப் புரிந்துகொண்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.

Exit mobile version