
உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்களை முடிவுசெய்யும் டைம் இதழின் தற்போதைய கணக்கெடுப்புக்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மோசடி செய்துள்ளார் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து ஆமதாபாதில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஜராத் அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை மோடி அனுப்பியுள்ளார். அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் எனத் தெரிவித்தார்.