ஏப்ரல் 26 அன்று, காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு ”இணைய புலனாய்வுப் பகிர்வு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை “ (Cyber Intelligence Sharing and Protection Act (CISPA) நிறைவேற்றியது. இந்த மசோதா 1947ம் வருட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (National Security Act) திருத்தமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இதுவரையிலும் “இணைய அச்சுறுத்தல்களுக்கு” தொடர்புடைய ஏற்பாடுகள் இல்லாதிருந்தது.
தேசியப் புலனாய்வுக் குழுவின் உறுப்பினர்கள் ஸ்தாபனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் “இணைய அச்சுறுத்தல் தகவல்களை” பகிர்ந்து கொள்கின்ற மற்றும் இதை செய்கின்ற நிறுவனங்களை “ஊக்குவிக்கின்ற” ஒரு அமைப்பை உருவாக்குமாறு தேசியப் புலனாய்வு இயக்குனரிடம் CISPA கோரும். வேண்டுமென்றே விஸ்தரிக்கப்பட்ட இந்த மசோதாவின் உள்ளடக்கம் Comcast அல்லது AT&T போன்ற இணையதள சேவை அளிப்பவர்களுக்கு (ISPs) அவர்களுடைய பயனாளிகளின் தொடர்புகள் மற்றும் தகவல்களை கண்காணிப்பதை கூடுதலாக தூண்டுவதுடன், அரசாங்கம் மற்றும் கூட்டுத்தாபன தகவல்வழங்குவோரை (whistleblowers) தண்டிப்பதற்கான முயற்சிகளை நெறிப்படுத்தும்.
அமரிக்காவில் உலகின் பல மொழிகளிலும் வெளிவரும் இணையங்களைக் கண்காணிப்பதற்கும் தகவல் வழங்குவதற்குமான சேவை உருவாக்கப்பட்டுள்ளது.