முகாம் வாழ்க்கைக்கு பதிலாக இடம்பெயர் மக்களுக்கு திறந்தவெளி சிறைச்சாலைகள் அவசியமில்லை என ஜே.வி.பி கட்சி குறிப்பிட்டுள்ளது.
அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த இடம்பெயர் மக்களுக்கு திறந்தவெளி சிறைச்சாலைகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.
மெனிக்பாம் முகாமிலிருந்த சிலர் கிளிநொச்சி மாவட்ட திருமுருகண்டி பிரதேசத்தில் மீள்குடியேற்றுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறித்த பிரதேசத்தில் மீள்குடியேற மறுப்பு தெரிவித்ததன் காரணமாக மக்கள் மீளவும் மெனிக்பாம் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மக்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றாது வேறு இடத்தில் அரசாங்கம் ஏன் மீள்குடியேற்ற முயற்சித்தது என்பதற்கு இதுவரையில் விளக்கம் அளிக்கப்படவில்லை.
இவ்வாறு மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடக் கூடாது என ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.
வன்னிப் படுகொலைகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய ஜே.வி.பி தமிழ் மக்கள் குறித்துப் பேசுவது வேடிக்கையானது.