Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இடம்பெயர்ந்தவர்களை காட்டிப் இரண்டு மாதங்கள் பிச்சை எடுத்த அரசாங்கம் இனியாவது அவர்களை, விடுவிக்க வேண்டும்:சரத் மனமேந்திர

 

பிச்சைக் காரர்களின் புண்னை போன்று, இடம்பெயர்ந்தவர்களை காட்டிப் இரண்டு மாதங்கள் பிச்சை எடுத்த அரசாங்கம் இனியாவது அவர்களை, விடுவிக்க வேண்டும் என புதிய ஜாதிக ஹெல உறுமயவின் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார்.

தமது பிள்ளை பலவந்தமாக பிடிங்கி யுத்தத்தில் ஈடுபடுத்திய விடுதலைப்புலிகளின் சிறைக் கைதிகளாக முப்பது வருடங்கள் இருந்த மக்கள், தற்போது அகதி முகாம்களில் அரசாங்கத்தின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதைபோலாகும் எனவும் மனமேந்திர தெரிவித்துள்ளார். 
 
 
  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மெனிக் பார்ம் முகாமில் உள்ள சிறிய கூடாரங்களில் இந்த மக்கள் பல மடங்கு துயர வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். அரசாங்கம் கொடுக்கும் உணவு பொதியை உண்டு விட்டு, நாளை தினம் குறித்து எந்த உணர்வுமின்றி அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் தினமும் அதிகவானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். நோய்கள் அதிகரித்துள்ளது. தந்தையை அறியாத நிலையில் கர்ப்பம் தரித்த 1000 பெண்கள் வரை உள்ளனர். பெண்களுக்கு தனியான கழிவறைகள் இல்லை. கழிவறைகள் இருந்த போதிலும் அவற்றுக்கு செல்ல நீண்ட வரிசை காணப்படுகிறது. எவரும் தொழில் செய்ய முடியாது, முகாமில் இருந்து வெளியில் செல்ல முடியாது. முடிந்தவர்கள் முகாமில் இருந்து தப்பிச் செல்கின்றனர். சிலர் வெளிநாடுகளும் சென்றுள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்க்குடியேற்றுவதற்காக கிடைக்கும் வெளிநாட்டு நிதியுதவிகளுக்கு என்ன நடக்கிறது என்பதும் பிரச்சினையாக உள்ளது. இடம்பெயர்நத மக்களை காட்டி பெறும் நிதியுதவிகளும் அவற்றினால் ஆரம்பிக்கப்படும் திட்டங்களும் கொள்ளையடிப்புகளாக இருக்கின்றன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியின்றி உறவினர் ஒருவரின் மரணச் சடங்களில் கூடக் கலந்துகொள்ள முடியாது. வெளிநாட்டவர்கள் முகாமுக்கு சென்று அகதிகளை பார்வையிடும் போது, அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் மொழிமாற்றத்தின் போது பாராட்டு பெறுகிறது.

போல்போட், இடி அமீன் போன்ற ஆட்சியாளர்களின் ஆட்சியில் கூட நலன்புரி நிலையங்கள் என்ற பெயரில் லட்சக்கணக்கான பிரஜைகளை தடுத்து வைத்திருந்த இவ்வறான முகாம்கள் இருந்திருக்குமோ என்பது சந்தேகமே. வெலிக்கடைச் சிறைச்சாலையில் இதனைவிட வசதிகள் இருக்கின்றன. பெண்கள் உடைகளை மாற்றக் கூட முகாம்களில் இடமில்லை. இந்த நிலையில் விடுதலைப்புலிகள் என தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் மனமேந்திர தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியில் இருந்து விலகி எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டமைப்பில் இணைந்து கொண்ட பின்னர் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது எனவும் புதிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version