Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இடதுசாரி அமைப்புக்கள் தேசிய இனப்பிரச்சனையில் காத்திரமான பங்களிப்பை வழங்கவில்லை : நிக் கிளேஸ்

பிரித்தானிய கம்யூனிசக் இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரும் செயற்பாட்டாளருமான தோழர் நிக் கிளேஸ் இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலில் இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் காத்திரமான பங்களிப்பை வழங்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டார். இன்று இடது சாரிகள் இது குறித்துச் சிந்திக்க ஆரம்பித்திருப்பது வரவேற்கத் தக்கது என்றும் ஆனால் அது செயற்பாட்டுத் தளத்தில் அமைந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இனப்படுகொலை நிகழ்ந்த காலத்தில் உலகம் முழுவதும் வாழும் போராடும் இடதுசாரி அமைப்புக்களிடமிருந்து அன்னியப்படுத்தும் நிகழ்ச்சி நிரலில் அமரிக்க உளவு நிறுவனம் செயற்பட்டதாகக் குறிப்பிட்டார். ஒரு புறத்தில் இடது சாரிகள் இதனை சுய விமர்சனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மறுபுறத்தில் அமரிக்காவின் திட்டமிட்ட சதி புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தவிர இலங்கையில், குறிப்பாக வட – கிழக்கில் நடைபெறும் நில ஆக்கிரமிப்பு வெவ்வேறு வடிவங்களில் உலகம் முழுவதும் நடைபெறுவதாகவும் உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்த போராட்டத்தினூடாகவே இது எதிர்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் மற்றொரு உரையாடலில் பிரித்தானிய இடதுசாரி அமைப்புக்கள் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் இலங்கையில் தேசிய இன ஒடுக்குமுறை குறித்த வேலைத்திட்டமும் இணைத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version