Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இடதுசாரிகளும் பிரிவினைவாதிகளும் : வடக்கான் ஆதம்

புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழும் முன்நாள் போராளியின் குறிப்பு

புலம் பெயர் இலங்கைத் தமிழர்களுக்கு மத்தியில் தம்மை இடதுசாரிகள் எனவும் மார்க்சிஸ்டுக்கள் எனவும் அதிலும் ஒருபடி மேலே சென்று திரொஸ்கிஸ்டுக்கள் அனவும் மார்தட்டிக்கொண்ட பலரின் கருத்து ஆச்சர்யத்தை மட்டுமல்ல அதிர்ச்சியையும் தருகின்றது. அதிகாரத்தோடு கைகோர்த்துக்கொண்டு முழு மனித குலமுமே அதிர்ந்து போய் நிற்க நடாத்தி முடிக்கப்பட்ட இனப்படுகொலைக்கு ஜனநாயகச் சாயம் பூச முனைந்து அகோரமாய்க் காட்சிதரும் உங்களை நினைத்தால் திரொஸ்கி மட்டுமல்ல ஸ்டாலினே அருவருத்துப் போவார்கள்.

இடதுசாரி என அறியப்பட்ட நீங்கள் இப்போதுஆயுதப் போராட்டம் தேவையில்லை எனவும் ஆயுத கலாச்சாரமற்ற ஒரு இலங்கையை உருவாக்க வேண்டும் எனவும் கூறுகிறீர்கள். இது நீங்கள் பீற்றித் திரிந்த மார்க்சியத்தோடே அடிப்படையில் முரண்கொளுக்ம் நிலைப்பட்டாகும்.

இலங்கை தீவில் சகல இன மக்களும சந்தோசமாகவும் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமலும் வாழ புரட்சி அவசியமானது என திரொஸ்கி என்ன, அவரது நாலாவது தலைமுறைக் கற்றுக்குட்டி சகா கூட கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வான்.

புரட்சியின் தேவையைப் பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கோருவதனூடாக மறுதலிக்கும் நீங்கள் புலம் பெயர் இலங்கைத் தமிழர்கள் அமரிக்கா பிரித்தானிய போன்ற நாடுகளிடம் மண்டியிடுவதாகக் கூறுவது சற்றேனும் நியாயமற்றது.! தமிழ் தேசியவாதிகள் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது அதற்கு முன்பே சிங்கள இடதுசாரிகளால் கால்வாரிவிடப்பட்ட நீங்களும் மற்றும் பல
இடதுசாரிகளும் பெரும்பான்மை மக்களான சிங்களவர்கள் இனவாதக் கட்சிகளின் ஆளுமைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால், அவர்களுடன் கூடி ஒரு புரட்சியை மேற்கொள்வது கஸ்டம் எனவும் தமிழர்கள் தனியாக பிரிவதன் மூலம் மட்டும் தான் சிங்கள மக்கள் மத்தியில் விரவியிருக்கும் இனவாத கருத்தியல் மறைந்து அவர்களும் புரட்சிக்கு தயாராவார்கள் என கூறி தமிழீழக் கோரிக்கைக்கும் பிரிவினைக்கும் ஆதரவாக கொடுக்கு கட்டியதை மறந்து விட்டீர்கள் போலும்.?

தமிழ்ப் பேசும் மக்கள் ஏனைய தேசிய இனங்களுடன் இணைந்து சம உரிமையுடன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ விரும்பியதை என்றைக்குமே மறுத்ததில்லை. அவ்வாறான விருப்புக்களெல்லாம் தொடர்ச்சியாக அதிகாரத்திலமர்ந்த பேரினவாதக் கட்சிகளால் நிர்மூலமாக்கப்பட்டு, வன்முறை சார்ந்த திட்டமிட்ட அடக்குமுறை தமிழ்பேசும் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போதே அவர்கள் அவ்வன்முறையை எதிர்கொள்ள ஆயுதம் ஏந்தும் நிலைக்குள் தள்ளப்பட்டனர்.

அப்போராட்டத்தை எமது “ஏகப்பிரதிநிதிகளான” பிரபாகன் அன்ட் கொம்பனி வலிந்து கையிலெடுத்து கொம்பனியையும் திவாலாக்கி போராட்டத்தையும் நிர்மூலமாக்கிவிட்டது என்பது மறுப்பிற்கிடமற்ற உண்மை.

இவ்வாறான தவறான வழிமுறைகளூடாக நியாயம் மிக்க ஒருபோராட்டம் சீரழிக்கப்பட்ட காரணத்தை முவைத்து போராட்டத்திற்கான தேவையே அற்றுப் போய்விட்டதாக நியாயம் கற்பிக்க முயலும் உங்களின் திரிபுகளை யாரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

சோவியத் யூனியனிலும் அதன் தோழமை நாடுகளிலும் சோசலிச முயற்சிகள் தோற்றுப் போய் விட்டதால் சோசலிச தத்துவம் தவறானது என கூறுவது சரியாகுமா?

தமிழ்ப் பேசும் மக்கள் ஏனைய தேசிய இனங்களுடன் இணைந்து சம உரிமையுடன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ விரும்பியதை என்றைக்குமே மறுத்ததில்லை. அவ்வாறான விருப்புக்களெல்லாம் தொடர்ச்சியாக அதிகாரத்திலமர்ந்த பேரினவாதக் கட்சிகளால் நிர்மூலமாக்கப்பட்டு, வன்முறை சார்ந்த திட்டமிட்ட அடக்குமுறை தமிழ்பேசும் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போதே அவர்கள் அவ்வன்முறையை எதிர்கொள்ள ஆயுதம் ஏந்தும் நிலைக்குள் தள்ளப்பட்டனர்.

அப்போராட்டத்தை எமது “ஏகப்பிரதிநிதிகளான” பிரபாகன் அன்ட் கொம்பனி வலிந்து கையிலெடுத்து கொம்பனியையும் திவாலாக்கி போராட்டத்தையும் நிர்மூலமாக்கிவிட்டது என்பது மறுப்பிற்கிடமற்ற உண்மை.

இவ்வாறான தவறான வழிமுறைகளூடாக நியாயம் மிக்க ஒருபோராட்டம் சீரழிக்கப்பட்ட காரணத்தை முவைத்து போராட்டத்திற்கான தேவையே அற்றுப் போய்விட்டதாக நியாயம் கற்பிக்க முயலும் உங்களின் திரிபுகளை யாரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

தமிழீழம் தான் தமிழ் மக்களிற்கான ஒரேயொரு தீக்வு என நான் ; கூறவில்லை. சிறுபான்மை மக்கள் தமது சம உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய எந்தத் தீர்வுமே புலிகளாலும் நான் சார்ந்திருந்த அமைப்பினாலும் துரத்தப்பட்டு (குழப்பவாதி என முத்திரை குத்த வேண்டாம்) வெளிநாட்டில் வாழும் எனக்கு ஏற்புடையதுதான்.

ஆனால் முப்பது வருடங்களுக்கு முன்வந்த பலர் புலிகளிடம் தலைமையை பறிகொடுத்த ஆத்திர உணர்வுடனும் பெரும்பான்மையான வெளிநாட்டு தமிழர்கள் புலியை ஆதரித்ததாலும், சிறுபான்மை தமிழருக்கு அதிகாரப் பகிர்வு எதுவும் தேவையில்லை எனவும் ஏதோ தமிழர்கள் சிங்களவர்களை ஒடுக்குவதாகவும் கூறி சிறுபான்மையினரின் மீது பிரயோகிகப்படும் திட்டமிட்டஒடுக்குமுறைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருகின்றனர்.

வடகிழக்கிற்கு வெளியே ஏராளமான தமிழர்கள் வாழ்கிறார்கள். இதிலிருந்து தமிழர்களின் தாயக கோடபாடு இல்லாமற் போகின்றதாம். 30 வருட போரில் நாம் ஓடி வந்து விட்டோம். அரசு இந்த தாயக கோடபாட்டை உடைப்பதற்காக குண்டுகளையும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களையும் பாவித்து தமிழர்களை சிதறடித்து விட்டது. மேலும் வெளிநாட்டு பாஸ்போட்டில் கொழும்பு செல்லும் நுனிநாக்கு ஆங்கிலம் (சிங்களம் கூட) பேசும் இவர்களுக்கு எந்தவித கஸ்டமும் இருக்க போவதில்லை என்பது தான் இவர்களின் எதிர்மறை அரசியலின் பின் புலம்.

83 இற்குப் பின்னர் தன்னெழுச்சியான எந்த இனபப்படுகொலைகளும் அரச ஆதரவுடன் நடைபெறவில்லை என்றும், இதனால் இனவாதம் தணிந்து போயுள்ளதாக அரசின் படுகொலைகளுக்கும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடிற்கெதிராகவும் “பின் – மார்க்சிய” விளக்கமளிக்கும் இந்த முன்நாள் இடதுசாரிகள், வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தை அதிகார வாந்தியெடுத்துவிட்டு மகிந்த சிந்தனையவை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் அரிச்சுவடி கூட அறியாத சுண்டக்காய் பொடியன்களுகுக் கூட அரசு என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படை. 83 இனப்படுகொலைகளை விட மிக மோசமான புதிய வடிவங்களினூடாகச் சர்வதேசங்களின் துணையோடு தமிழ்ப் பேசும் மக்களைக் கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது.
83 இனப்படுகொலை போன்ற ஒடுக்குமுறை வடிவங்கள் காலாவதியாகி விட வன்னி இனப்படுகொலை போன்ற புதிய குரூரமான வடிவங்களில் இனப்படுகொலை மேலும் அதிக உயிர்களைப் பலிகொள்கின்றது.

தயவு செய்து மீண்டும் மீண்டும் கூறுகின்றேன்- இந்த எழுத்தின் நோக்கம் தமிழீழத்தின் தேவையை எடுத்து சொல்வதல்ல. (பாவம் மக்கள் அவர்களின் மேல் இன்னும் ஒரு போரை திணிக்க முயற்சிப்பது துரோகமானது).

ஆனால் நான் குறித்துக்காட்டும் நபர்கள் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கல் எனவே சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழலாம் என- எந்த எதிர்காலம் பற்றிய கணிப்பீடுமின்றி – முன்மொழிகின்றனர்.
புலம் பெயர் சூழலில் புதிதாக முளைவிட்டிருக்கும் இந்த இடதுசாரிகள் தமது கருத்தியலூடாக ஏனைய அனைத்துப் பிற்போக்காளர்களுடனும் மக்களுக்கெதிராகக் கைகோர்த்துக்கொள்கிறார்கள்.
1. பிரிவினைவாதிகள் : வடகிழக்குத் தமிழர்களின் இணைவை எதிர்ப்பதன் மூலம் பிரிவினையை முன்வைப்பவர்களான கிழக்கு விடிவெள்ளிகள்.
2. தலித்துக்களுக்கு தனி அலகு வேண்டுமென்று ஒடுக்குமுறை அரசோடு சமரசம் செய்துகொள்ளும் பிரிவினை வாதிகள்.
இணைவிற்கெதிரான இப்பிரிவினை வாதிகளதும் இடது சாரிகளான சந்தர்ப்பவாதிகளதும் மக்கள் விரோதக்கூட்டு எதிர்கொள்ளப்படவேண்டும்.

இவர்கள் மக்கள் மேல் சமூக உணர்வும் மக்கள் பற்றும் உடையவ்ர்கள் எனில் பல அறிஞர்களைக் கொண்ட உண்மை அறீயும் கமிசன் ஒன்றை உருவாக்க அரசிற்கு அறிவுறுத்த வேண்டும். அரசினாலும் புலிகளாலும் திட்டமிட்ட முறையில் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதை மறுக்க முடியாது. நான் வன்னி அவலங்களுக்கு முன்;பு நடந்தவைகள் பற்றியும் கூறுகின்றேன். பாசாலைகள் தேவாலயங்கள் என குண்டு வீசி அழிக்கப்பட்டது பௌசர் குண்டுகள் செல்லுகள் என வீசப்பட்டது. குமுதினி படகு கொலைகள் மட்டக்களப்பில் கிராமம் கிராமமாக ளுவுகு இன் இன அழிப்பு என கூறலாம். புலிகளும் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் காத்தான்குடி ஏறாவூர் படுகொலைகள் என அரசிற்கு குறைவானவர்கள் அல்ல. ஆனால் ஏதாவது ஒன்றிற்காவது அரசபடைகள் தண்டிக்கப்படாதது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலங்கை குடிமக்களென எந்தவிதமான உணர்வையும் ஏற்படுத்தி விடாது.

அரசியல் அமைப்ர்ச் சட்டம் நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் சமத்துவமாக நடத்த உறுதி செய்ய வேண்டும். இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏராளமான குழப்பங்கள் உள்ளன. சரி! அவற்றை நிவர்த்தி செய்து சந்தோசமாக வாழலாம் என்றால் திடீரென பெரும்பான்மையுடன் (77 யுஎன்பி) ஒரு சிங்கள கட்சி ஆட்சிக்கு வந்து அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றி எழுதினால் என்னவாகும். எனவே அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தும் போது சிறுபான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகள் பெற்றே திருத்தப்பட வேண்டும். அன்றேல் வீட்டோ பவர் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

இங்கு பலருக்கு சிங்கள தேசியவாத நோய் முற்றி வன்னிப் மனிதப்படுகொலைகள் போலவே ஆப்கானிலும் ஈராக்கிலும் நடைபெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி வன்னியிலும் கொல்லப்படலாம் என கொலைகளுக்கான அங்கீகாரத்தை வழங்கினர்.

உண்மைதான். நீங்கள் அங்கு கொலை செய்தால் நாங்கள் இங்கு கொலை செய்வோம் என கூறுகிறார்கள். தீர்ப்பை உங்களிடமே விட்டு விடுகிறோம். இராணுவ தளபதி கூறுகிறார் இது சிங்கள நாடு என: ஜனாதிபதி கூறுகிறார் சிறுபான்மை பெரும்பான்மை இல்லை என.

நண்பர்களே இங்கு குற்றம் சொல்வதல்ல எனது நோக்கம். பிரச்சனையை கூட்டி கழித்து பெருக்கி பிரித்து பார்க்க வேண்டும். போராட்அத்தை தமிழ்மக்களின் மேல் நாம் (நாம் குறிப்பிடுபவர்கள் உடபட) திணித்து விட்டு எங்களில் ஒரு பிழையும் இல்லை எனவும் ஆரம்பித்த நாமே அந்த மக்களுக்கு விரோதமாக மக்களை வெக்கத்து நடுத்தெருவில்னாய்கள் நிணம் புசிக்குமாறு செய்வது அழகல்ல. உங்களுக்கு எப்படியோ தெரியாது எனக்கு உறக்கம் வருவதில்லை.

அரசியல் அமைப்பு சட்டத்திற்குட்பட்டு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உண்டு. உதாரணமாக கொழும்பில் வழ்ந்த தமிழர்கள் அங்கு வாழ்வனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்ப்ட்ட ப்போது அதைச் சட்டரீதியாக எதிர்கொண்டமை அல்லது வன்னி முகாம் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான வழக்கு போன்றவற்றை பாக்கியசோதி சரவணமுத்து தான் செய்ய வேண்டும் என்றில்லை. இந்த நுனிநாக்கு ஆங்கிலகாரர் எங்கு போய்விட்டார்கள்? எங்களுக்கு சட்டரீதியாக எதிர் கொள்ள விருப்பம் இருப்பினும் கொழும்பில் கூட மொழிபெயர்ப்பாளர்கள் தேவை என எண்ணும போது கல்வியப் பூர்த்திசெய்யாமல் இந்த இயக்கங்களின் பின் ஓடியது கவலையை தருகிறதுதான். பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல்;,மீன்பிடித் தடையை அகற்றுதல்…..போன்றவற்றை சட்டரிதியாக எதிர்கொள்ள ஏராளமான சிங்கள சட்டமேதைகள் தயாராக உள்ளனர்.

எனவே இன்றைய சூழ்நிலையைக் கருத்தற் கொண்டு எங்களால் முடிந்த அளவிற்கு அனைத்து தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணைத்து;, இலங்கை வாழ் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களுடன் இணைந்து வாழக் கூடிய ஒரு பொறிமுறையைக் கண்டு பிடிப்பதே எம்முன் உள்ள உடனடித் தேவையாகும்.

 

Exit mobile version