பிரித்தானிய அரசு இலங்கை மீது அழுத்தங்களை வழங்கி வியாபார ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொள்வதற்கான மனித உரிமை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. இலங்கை அரசு பிரித்தானிய அரசிற்கு நெகிழ்ந்துகொடுக்கும் அளவிற்கேற்ப மனித உரிமை கூக்குரலின் அளவும் மாறுபடும்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்யும் அதே வேளை திருகோணமலையில் உருவாக்கப்படும் 4 பில்லியன் டொலர் பெறுமதியான வியாபார மையம் பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும்.
இசைப் பிரியாவின் மரண ஓலம் ஏகாதிபத்தியங்களின் மூலதனமாகும் அவலத்திற்கு எமது அழிவு அரசியலே பிரதான காரணம்.
மனித உரிமையையும் மக்களின் அவலங்களையும் வியாபாரப் பொருளாக மாற்றிய கொடிய கொலைகார அரசுகளும் அதன் ஐந்தாம் படை தமிழ் அமைப்புக்களும் இலங்கையில் வாழும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
தேசிய விடுதலைப் போராட்டம் என்பதை இனவாதப் போராட்டமாக மாற்றிய அவலத்தின் விளைவு இது. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களோடும் போராட்ட அமைப்புக்களோடும் இணைந்த புதிய அரசியல் அடித்தளத்தின் தோற்றம் இன்றைய அவசரத் தேவை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.