Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆஸாத் மௌலானாவுக்கு கல்த்தா : அடுத்த இலக்கு பிரதீப்மாஸ்ரர், பிரான்ஸ் ஞானம்

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் புதிய ஊடகப் பேச்சாளராக தட்சணாமூர்த்தி கமலநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) வழங்கியுள்ளார். இவர் பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. மு.வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பாக மட்டு. மாவட்டத்தில் போட்டியிட்டவருமாவார்.
ஏற்கனவே இவ்வமைப்பின் ஊடக பேச்சாளராக ஆசாத் மௌலான நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் பிள்ளையானுடன் நெருங்கிய உறவைப் பேணுபவர் என்ற அடிப்படையில் கருணா இவரை அந்தப் பதவியில் இருந்து அகற்றி உள்ளார். கருணா பிள்ளையான் முரண்பாடு படிப்படியாக உச்சநிலையை அடையும் நிலையில் பிள்ளையானுக்கு நெருக்கமானவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அடுத்து கட்சியின் செயலாளராக உள்ள பிரதீப் மாஸ்ரர்இ வெகுஜனத் தொடர்பு அதிகாரியான பிரான்ஸின் கடவுச்சீட்டைக் கொண்ட ஞானம் ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பிரதீப் மாஸ்ரர் குறித்து கருணாவின் இணையத் தளத்தில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே கட்சியின் தலைவராக இருந்த ரகு என அழைக்கப்படும் குமாரசாமி நந்த கோபன் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு குளோபல் தமிழ் நியுஸ்  தெரிவிக்கிறது. அதே வேளை கருணாவின் தீவிர ஆதரவு இணையத்தளமான ‘கிழக்கு’ பின்வரும் செய்தியையும் வெளியிட்டுள்ளது.

 

 சின்ன மாஸ்டர் எனப்படும் எம்.ஆர். ஸ்டாலின் என்பவர் தற்போது முதலமைச்சரின் இன நல்லினக்க சபையின் பணிப்பாளராகவுள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டின் பிரஜாவுரிமையுடையவர் இவர் தனது பிரஜாவுரிமையை புதுப்பிப்பதற்கு மாதமொன்று ஜந்து இலட்சம் ரூபாய் பணத்தை கிழக்கு மாகாண சபை மூலம் தனது விசாவை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன நல்லினக்க சபை வெருமனே கண்துடைப்புக்காண சபையாகவே செயற்படுகிறது. இந்த சபை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இனமுறுகல் சம்பவங்கள் நடந்தேரியுள்ளன. இந்த சம்பவங்களை இனநல்லினக்க சபை கையாண்ட விதம் மற்றும் மக்களுடனான தொடர்பு போன்றவைகள் இந்த சபையின் உண்மைத்தன்மையை எமக்கு தெளிவுபடுத்துகிறது.
இவ்வாறு அதிகார வர்க்கங்களின் இல்லமாக கிழக்கு மாகாண சபை மாறிவிடுமோ என மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளார்கள். இந்த நிலமை இப்படியே சென்றால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையாகவே கிழக்கு மாகாண சபை கிழக்கு மக்களுக்கு அமைந்து விடும்.
நன்றி: குளொபல் தமிழ் நியுஸ்
     கிழக்கு

Exit mobile version