Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆறு பேரைச் சுட்டுக் கொன்ற அமெரிக்க துப்பாக்கிதாரி ஒரு நவ நாசி

ஞாயிறன்று ஒரு விஸ்கான்சின் சீக்கிய கோயிலில், துப்பாக்கிதாரி உட்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது, மூன்று பேர் தீவிரமாகக் காயமுற்றது என்னும் விவகாரத்தில் பலவும் தெளிவற்றதாக உள்ளன. ஆனால் ஒன்று தெளிவு: கூறப்படும் துப்பாக்கிதாரி நீண்ட காலமாக ஆழ்ந்த தொடர்பை வெள்ளை இனவாத, நவ நாஜிச வட்டங்களில் தொடர்பு கொண்டிருந்தார் என்பதே அது.

வேட் மிசேல் பேஜ் (Wade Michael Page) பாசிசப் பரிவுணர்வுகள் குறித்த ஏராளமான தகவல்கள் குறித்து செய்தி ஊடகம் மற்றும் அமெரிக்க அதிகாரிகளால் அதிகம் பேசப்படவில்லை; பொதுவாக செய்தி ஊடகம் கூறும் கருத்து, “உந்துதலுக்குக் காரணத்தை கண்டுபிடித்தல்” முக்கியம் என்பதுதான். ஆனால் கிடைத்துள்ள சான்றுகளோ பேஜ் இன் இனவழி இந்தியர்களுக்கு எதிரான கொலைவெறி இனவாத, பாசிச அரசியல் செயற்பட்டியலின் உந்துதலைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகின்றன; இது அவருடைய குற்றத்தை வலதுசாரி உள்நாட்டுப் பயங்கரவாதம் என வரையறுக்கிறது.

40 வயதான இராணுவத்தில் வேலைபார்த்திருந்த துப்பாக்கிதாரி ஒரு 9 மில்லிமீட்டர் தானியங்கிக் கைத்துப்பாக்கியை பயன்படுத்தி, விஸ்கான்சின் மிலுவாக்கிப் புறநகரான ஓக் க்ரீக் இல் உள்ள சீக்கியர் கோயிலில் 6 பக்தர்களைக் கொன்றதுடன், மற்றும் இருவரை, ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட, தீவிரமாகக் காயப்படுத்தி அவர்கள் மருத்துவமனையில் உயிரோடு போராடும் அளவிற்கு அனுமதிக்கப்படவும் சுட்டுள்ளார். இதன்பின் பொலிசுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டுப் பறிமாற்றத்தில் பேஜ் கொலையுண்டார்.

39 வயதில் இருந்து 84 வரை வரை இருந்த இறந்துவிட்ட சீக்கியர்களில் ஐந்து ஆடவரும் ஒரு மகளிரும் உண்டு; இவர்கள் சீதா சிங் (41), ரஞ்சித் சிங்(49), சத்வந்த் சிங் கலேகா (65), பரம்ஜிட் கௌர் (41) மற்றும் சுவேக் சிங் (84) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Exit mobile version