Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆறு கோடியே ஐம்பது லட்சம் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் தமிழ்நாட்டில் கண்டுபிடிப்பு!

dinoதமிழ்நாட்டில் அரியலூர் அருகே உள்ள கிராமத்தில் கல்லாகிய நூற்றுக்கணக்கான டைனோசோர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆற்றுப் படுகை அருகே நிலவியல் விஞ்ஞானிகள் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தபோது, குவியல் குவியலான கல்லாகிய முட்டைகள் மண்ணாலான கூடுகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கல்லாகிய முட்டைகள் பார்ப்பதற்கு டினோசோர் முட்டைகள் போல இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவை ஆறு கோடியே ஐம்பது லட்சம் ஆண்டுகள் பழமையானவையாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொன்றும் ஒரு கால்பந்து அளவில் இருக்கின்ற இந்த முட்டைகள் சொரோபோட்ஸ் எனப்படும் கழுத்து நீண்ட தாவர உண்ணி டைனோசோர் வகையை சேர்ந்தவை என்று ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

டைனொசோர் இனம் ஏன் அழிந்தது என்பது பற்றி கூடுதல் விபரம் அறிய இக்கண்டுபிடிப்பு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

Exit mobile version