Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆறாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்பும் அதற்கான பிரதிபலிப்புகளும்

இலங்கையின் ஆறாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக 19.11.2010 வெள்ளிக்கிழமை காலை சுபவேளையில் மகிந்த ராஜபக்ஷ பதிவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இப்பதவிப் பிரமாணத்தையொட்டி இலங்கையின் அரசியல் கட்சிகள் – தலைவர்கள், மதத்தலைவர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கருஜெயசூரிய, நாட்டை வருத்தி பொதுமக்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய்களை வீணாக்கி அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகின்ற இவ்விழா நிகழ்வைப் புறக்கணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிகழ்வைப் புறக்கணிக்குமாறு கட்சி ஆதரவாளர்களைக் கோருகிறோம் எனவும் தெரிவித்திருக்கிறார். நாட்டு மக்கள் விலைவாசி, கடன் சுமைகளுக்கு உள்ளாகியுள்ளார்கள், ஜனாதிபதி சூதாட்டத்தசை; சட்டமாக்குகிறார்: கொழும்பிலிருந்து குறைந்த வருமானம் பெறுவோரை விரட்டியடிப்பதற்கு முயற்சிக்கின்றார். இதனால் பொதுமக்களின் சார்பாக சிந்தித்து ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தை புறக்கணிப்பதென கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
கண்டி அஸ்கிரிய பௌத்த பீட மஹாநாயக்க உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர், இலங்கை வரலாற்றில் அதிமுக்கிய அத்தியாயமாக மகிந்த ராஜபக்ஷ திகழ்கிறார். காலத்தின் தேவைக்கேற்ற யுக புருஷர் அவர். கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாத பேரழிவில் சிக்கி சீரழிந்திருந்த நம் நாட்டை மீட்டு நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டிய தலைவர். சர்வதேச ரீதியில் நம் நாட்டிற்கேற்படுத்தப்பட்ட அபகீர்த்தியை மீண்டும் கீர்த்தியாக்கியவர் அவர் எனத் தெரிவித்திருப்பதுடன் வாழ்த்தையும் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துக் கடிதத்தில், இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக இரண்டாவது பதவிக்காலத்துக்கு தாங்கள் பதவியேற்பதையிட்டு எமது பாராட்டுக்களையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கையின் வடக்கு, கிழக்கிலுள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக ஒன்றுபட்ட நாட்டுக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை காண்பது பற்றியும் ஏற்கனவே தங்களுடன் கலந்துரையாடியுள்ளோம். எமக்கு வழங்கப்பட் உறுதி மொழிகளுக்கு அமைவாக இந்த இலக்குகளை உள்வாங்கிக் கொள்வதற்குத் தேவையான பொறிமுறைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்பதில் நாம் நம்பிக்கையுடன் உள்ளோம் எனத் தெரிவித்திருக்கிறார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன்; . தொண்டமான், எம்மால் முன்வைக்கப்பட்ட பல திட்டங்களை ஏற்றுக்கொண்டு மலையக மக்களின் அபிவிருத்தியில் பெரிதும் அக்கறையுயைட ஒரு தலைவரை நாம் பெற்றிருக்கிறோம் எனத் தெரிவித்திருப்பதுடன், இரண்டாவது முறையாகவும் மக்களின் ஆணையைப் பெற்றுப் பதவியேற்கும் ஜனாதிபதியின் பதவிக்காலம் சிறப்புற வாழத்துக்கிறோம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைத் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன், 30 ஆண்டுகளாக நிம்மதியற்றிருந்த மக்களின் வாழ்வில் நிம்மதியை ஏற்படுத்தி சுதந்திரமாக நாட்டில் எங்கும் சென்று வர வழி அமைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மன உறுதிக்கும் யுத்தத்திற்கு தீர்வு கண்டு தமிழ் மக்கள் சுபீட்சமாக வாழ வழிவகுத்தற்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன் என வாழத்துத் தெரிவித்திருக்கிறார்.
தேசிய காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா, வரலாற்றில் ஏற்பட்ட துயரங்களை களைந்து வெற்றி கண்ட தலைவான் எனத் தெரிவித்திருப்பதுடன், மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நீண்டு நிலைத்து இந்நாடும் நம்மவரும் வளம்பெற வாழ்த்துவொம் எனத்தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிhவரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பதுவும் விரவில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version