பல நிலைப்பாடுகளைக் கொண்ட ஜனநாயக சமூகத்தில் கட்டாயமாக இருக்கவேண்டிய எதிர்க்கட்சி அரசியல் இலங்கையில் படிப்படியாக மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இந்தத் தாக்குதல்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பிரதான எதிர்ப்பு நடவடிக்கையின் மீது தாக்குதல் நடத்தச் சென்ற வன்முறையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினர் இறுதியில் அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.
பொதுமக்களின் அரசியலமைப்பு ரீதியான உரிமைகளைப் பாதுகாப்பதைவிட அரசியல் ஆதரவு பெற்ற வன்முறைக் குழுக்களைப் பாதுகாக்க தாம் கடமைபட்டுள்ளதாக காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் சுட்டிக்காட்டுவதாக ஊடக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.