
அவ்வாறு தடுப்பது ஜனநாயக விரோத செயற்பாடாக உள்ளதால் அரசாங்கத்தை அது நெருக்கடிக்கு உள்ளாக்கும். முஸ்லிகளாகிய நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எம்மிடம் முன் வைப்பது போல் அவர்களும் பலவிடயங்களை சுட்டிக்காட்டி எமக்கு பல அழுத்தங்களை பிரயோகிக்கின்றார்கள்.
என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஸ அவரது அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரமுகர்களினுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போது அது ஜனநாயக உரிமையாகக் கண்டுகொள்ளாத பாசிஸ்ட் கோதாபய சிங்கள இனவாதிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போது ஜனநாயக உரிமையாகக் கணிப்பிடுகிறார். இலங்கையில் பேரினவாதிகளுக்கும், பணம்படைத்த பல்தேசிய நிறுவனங்களுக்கும் மட்டுமே ஜனநாயக் உரிமை உண்டு என்பதை கோதாபய கூறுகிறர்.