Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆயுத விவகாரம் குறித்த விவாதம் : ஜனாதிபதிக்கு நேரமில்லை

ஆயுத விவகாரம் தொடர்பில் நேரடி விவாதமொன்றில் கலந்து கொள்ளும் அளவிற்கு ஜனாதிபதிக்குப் போதியளவு கால அவகாசமில்லை என்றும், விவாதத்தை நடத்த ஜே.என்.பியின் தலைவர் விமல் வீரவன்ஸ தயாராக இருக்கின்றார் எனவும் அரசாங்கத்தின் சார்பில் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தேர்தல் விவகாரங்கள் தொடர்பில் நேரடி விவாதமொன்றில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா விடுத்த கோரிக்கைக்கு அரசு பதிலளித்துள்ளது.

இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்ற ஆயுதக் கொள்வனவு விவகாரம் தொடர்பில் விவாதமொன்றை நடாத்துவதற்கு ஜே.என்.பியின் தலைவர் விமல் வீரவன்ஸ தயாராக இருக்கின்றார் என சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார் எனவும், இதனால் நேரடி விவாதங்களில் பங்கேற்கக் கூடிய சாத்தியம் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேரடி விவாதமொன்றில் கலந்து கொள்ளுமாறு ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடகப் பேச்சாளர்களான அனுர குமார திஸாநாயக்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் ஜனாதிபதிக்கு எழுத்து மூல கோரிக்கை விடுத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version