இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை தடுக்க தமிழ் தலைவர்கள் முயற்சித்த போது அவர்களும் படுகொலை செய்யப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாடகை வேட்பாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, வன்முறைகள் ஓயும் வரையில் தமிழ் அரசியல் தலைமைகள் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கணவன் மனைவியை கொடூரமாகத் தாக்கினால் அதனை வீட்டுப் பிரச்சினையாக கருத முடியாது, அயலவர்கள் அந்த விடயத்தில் தலையீடு செய்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதே நிலைமைதான் இலங்கைத் தமிழர் பிரச்சினையின் சர்வதேச தலையீடுகளுக்கும் உரித்தாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டம் ஆயுதப் போராட்டமாக அமையவேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது மக்கள் அல்ல மக்களின் எதிரியே என்ற அரசியல் அரிவரிப்பாடத்தைக் கூடப் புரிந்துகொள்ளாத வாடகை விக்னேஸ்வரன் நீண்டகாலம் தனது எஜமானர்களுக்குச் சேவையாற்றக் காத்திருந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகிறது. மக்கள் எழுச்சி கொள்வதற்கான சூழல் ஏற்படும் போதெல்லாம் கதாநாயர்களை உருவாக்கி அவர்களை வீட்ட்டுக்குள் முடக்கிவிடும் அதிகாரவர்க்கம் இப்போது விக்னேஸ்வரனை வாடகைக்கு அமர்த்தியுள்ளது.