இனப்படுகொலையைத் தலைமை தாங்கியவர்களில் முதனமையானவரானக் கருதப்படும் கோதாபய ராஜபக்சவிற்கும் ரொபேர் ஓ பிளேக்கிற்கும் இடையேயான சந்திப்பில் பிளேக் ஆப்கானிஸ்தான் யுத்ததிற்கு இலங்கையை உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆப்கனிஸ்தான் இராணுவ அணிக்கு அடியாட்களையும் இராணுவத்தையும் வழங்குமாறே இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் முஸ்லீம்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற காரணத்திற்காக கோதாபய உடனடியாக ஆட்களை வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.
விக்கிலீக்ஸ் இன் இரகசியக் கேபிள் ஒன்றில் இத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் யுத்ததிற்கு மட்டுமன்றி உலகில் நடைபெறும் யுத்தங்களுக்கு தனியார் இராணுவ நிறுவனங்கள் கொலைகாரர்களை வழங்கிவருவது அறியப்பட்டதே.
கோதாபயா தனியார் இராணுவ நிறுவனம் ஒன்றின் உரிமையாளார் என்பது குறிப்பிடத் தக்கது.