ஆப்கானிஸ்தானில் மனைவியுடன் கணவன் வல்லுறவு கொள்வதை சட்டபூர்வமாக்கும் புதிய சட்டத்தை எதிர்த்து தலைநகர் காபூலில் எதிர்ப்பு தெரிவிக்க முற்பட்ட ஆப்கானியப் பெண்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சட்டத்தை ஆதரிக்கும் சிலர், அந்தப் பெண்கள் மீது கற்களை வீசி, அவர்களிடமிருந்த பதாகைகளை பறிக்க முற்பட்ட போது, போலீசார் தலையிட்டனர்.
அதிபர் ஹமீத் கர்சாய் அவர்களின் அங்கீகாரத்துடன் சட்டமாகியுள்ள இந்த விடயம் வெளிநாடுகளில் எழுப்பப்பட்டுள்ள கண்டனங்களையடுத்து இப்போது மறுபரிசீலனை செய்யப்படுகிறது .
BBC.