துப்பாக்கிகளுடன் வந்த 3 பேர் தூதரகம் மீது சரமாரியாக சுட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடியின் வரவும் அமெரிக்காவின் ஆசியாவை இராணுவ மயப்படுத்தும் திட்டமும் இவ்வாறான பல்வேறு இரத்தக்களரிகளை ஆசியாவில் ஏற்படுத்தும்.
மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் 3 பேரில் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டதாகவும் தூதரகப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், நிலைமையை இந்திய வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தூதரகத் தகவ்ல்களின் அடிப்படையில் இந்தோ-தீபெத்தியன் எல்லைப்படைகளே ஒருவரைச் சுட்டுக் கொலைசெய்ததாக அறிவிக்கப்பட்டது.