Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆப்கன் தீவிரவாதிகள் கடத்திய ஜப்பான் நிருபர் விடுவிக்கப்பட்டார்

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் கடத்திச் சென்ற ஜப்பா னிய நிருபரை ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் விடுவித்தனர்.ஆப்கானிஸ்தானில் போர் பகுதியில் செய்தி சேகரிக்கும் பணியில் ஜப்பானிய நிருபர் கோசுகே குனேகா செயல் பட்டு வந்தார். இவரை கடந்த ஏப்ரல் 1ம்தேதியன்று ஆப் கானிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.கடந்த 5 மாதமாக அவரை உயிருடன் மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையில் சனிக் கிழமையன்று இரவு ஜப்பானிய தூதரகம் முன்பாக மிக சோர்வான நிலையில் அவர் விழுந்து கிடந்தார். உயிருக்கு எவ்வித அபாயமும் இன்றி தீவிரவாதிகள் அவரை விடு வித்தனர்.
தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட கோசுகே ஆப்கா னிஸ்தானில் இருந்து புறப்பட்டார். அவர் துபாயில் இருந்து எழுதிய தனது இணையதள பகுதியில் தம்மை மீட்பதற்காக பாடுபட்டவர்களுக்கும், என் நலனுக்காக கவலைப்பட்டவர்களுக்காகவும் நன்றியை தெரிவிப்பதாக அவர் இணையதள செய்தியில் கூறியிருந்தார். ஜப்பானிய நிருபர் கோசுகே, டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையம் செல்ல புறப்பட்டு கொண்டிருப் பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Exit mobile version