இரும்பு, தங்கம், நியோ பியம், லித்தியம், கோபால்ட் உள்ளிட்ட ஏராளமான கனிமங்கள் உள்ளன என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ கூறு கிறது. மிகவும் லகுவான லித்தியம் இங்கு ஏராளமாக உள்ளது. தொழில்துறை களில் லித்தியத்துக்கு பெரும் கிராக்கி உள்ளது. மொபைல் தொலைபேசி, புகைப்படக் கருவி, ஐ-பேட் மற்றும் லேப்டாப் ஆகிய வற்றிலும், மின்சாரம் மற் றும் ஹைபிரிட் கார்களி லும் பயன்படும் மின்கலங் கள் தயாரிக்க இது பயன் படும்.
இராக்கின் எண்ணெய் வளத்தைக் கொள்ளை யடிப்பதற்காக சதாம் உசே னைக் கொன்று, இராக்கை ஆக்கிரமித்துள்ளது அமெரிக்கா. இராக்கில் அமைதி திரும்பிய பின் 2011ல்படைகள் விலக்கப் படும் என்று அமெரிக்கா கூறியது. ஆனால், ஆப்கா னிஸ்தானில் கூடுதலாக 35 ஆயிரம் படைகளை அமெ ரிக்கா குவித்துள்ளது.பின்லேடனை உயிரு டனோ, பிணமாகவோ பிடிக்கப் போவதாக ஆப் கானிஸ்தானில் காலடி யெடுத்து வைத்த அமெ ரிக்கா, அங்கிருந்து படை களை விலக்கிக் கொள் வதாக அறிவிக்கவில்லை. புஷ்ஷை விட வேறுபாடா னவர் என்று கூறப்பட்ட ஒபாமா, அங்கு கூடுதலாகப் படைகளை அனுப்பியுள் ளார். அமெரிக்கா கொள் ளையிட மற்றுமொரு நாடு கிடைத்துவிட்டது. கனிம வளங்களுக்கான யுத்தத்தை இந்தியாவின் தண்டகாரண்யாவுக்கு விரிவு படுத்திய அமெரிக்காவுக்காக சிதம்பரம், மன்மோகன் குழுவினர் பழங்குடி மக்களை வேட்டையாடி அழித்து வருகிறார்கள். இனி ஆப்கன் மக்களுக்கும் எப்போதும் விடிவு இல்லை. இது இப்பிராந்தியத்தில் கடும் போர்பதட்டத்தை உருவாக்கலாம் என அஞ்சப்படுகிறது.