Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆபாகானில் இருந்து பன்னாட்டுப் படைகள் வெளியேறுமா?

ஆப்கானை ஆக்ரமித்து நிற்கிற பனனாட்டுப்படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக ஏகாதிபத்திய நாடுகள் எந்த ஒரு முடிவும் எடுக்காத நிலையில், அமெரிக்க அதிபராக பாரக் ஓபாமா பதவிக்கு வந்த பின்னர் மேலதிகப் படைகளை ஆப்கானுக்கு அனுப்பிய பின்னர் ஆப்கானில் ஏராளமான கனிம வளங்கள் கண்டு பிடிக்கப்பட்சுள்ள நிலையில் பன்னாட்டுப் படைகள ஆப்கானில் இருந்து எப்படி விலகும் என்ற கேள்விகளுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானிலிருந்து 2014-ம் ஆண்டுக்குள் அன்னியப் படைகள் வெளியேறும் என்று பிரிட்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் பயங்கரவாதிகளை ஒழித்து, அங்கு ஸ்திரத்தன்மையுள்ள அரசை கொண்டு வருவதற்காக அமெரிக்கா தலைமையிலான சர்வதேச படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் 2014-ம் ஆண்டுக்குள் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் என்று லண்டனிலிருந்து வெளியாகும் இன்டிபென்டன்ட் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தை ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டெபான் டி மிஸ்டுரா ஆப்கானிஸ்தான் உயர் அதிகாரிகளிடம் வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2014-ம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழித்துவிட்டு நேட்டோ படைகள் வெளியேறுவதற்கு முழு ஒத்துழைப்பை ஆப்கானிஸ்தான் அளிக்கும் என்றும் அந்தப் பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஜூலை 20-ம் தேதி சர்வதேச வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தானிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஈடுபடவேண்டும். இதற்கு ஆப்கானிஸ்தான் அதிபர் முழு ஆதரவளிப்பார் என இந்த மாநாட்டில் வலியுறுத்தப்படவுள்ளது. மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் பான் கீமூன், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version