Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆனந்தசங்கரி கற்றறிந்த பாடங்கள்

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் நீண்டதொரு சாட்சித்தை வழங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, வன்னி யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் தொடர்பாக தன் கவலைகள் பலவற்றை வெளியிட்டிருக்கிறார்.
பத்தாயிரம் தொடக்கம் பதினோராயிரம் பேரைப் போராளிகளாக முத்திரை குத்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை பாரதூரமான குற்றமாகும் என வலியுறுத்துவதாகக் ஆனந்தசங்கரி கூறியிருக்கிறார். 20, 30 ஆண்டுகளுக்கு முன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜே.வி.பி போராளிகள் அக்கராயனில் அமைக்கப்பட்ட புனருத்தாரன முகாமில் வைத்து ஆறுமாத காலத்தில் புணர்வாழ்வளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். தடுப்புக் காவலிலுள்ள தமிழர்கள் ஜே. வி. பி. காலத்தில் மேற்கொள்ளப்பட்டது போன்று கன்னியமான நபர்கள் கொண்ட குழுக்களால் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போது மக்கள் கொண்டிருந்த மகிழ்ச்சி படிப்படியாக குறைந்து வருகின்றது. இப்போதுள்ள பிரச்சினை தத்தமது வீடுகளிலிருந்து வெளியே வர மக்கள் பயப்படுகிறார்கள். பேச்சு சுதந்திரமின்மையால் பேசப் பயப்படுகின்றார்கள். அவர்கள் விரும்பிய இடங்களுக்கு போக முடியாததால் சுதந்திரமாக நடமாடும் உரிமையை இழந்து நிற்கின்றார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.
எமது பிரச்சினை என்னவென்று அனைவருக்கும் தெரியும். எத்தகைய தீர்வு ஏற்புடையதாக இருக்குமென அனைவரும் அறிவர். ஏற்புடைய தீர்வு முன்வைக்கப்பட்டால் இராணுவ முகாம்களுக்கு தொடர்ந்து வேலை இருக்காது. ஏற்புடைய தீர்வு முன்வைக்கப்படாவிட்டால் இராணுவ முகாம்களுக்கு நிறைய வேலை இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நிர்வாகத்தை இராணுவ அதிகாரிகளிடமிருந்து மீளப்பெற்று சிவில் சிவில் நிர்வாகமாக மாற்ற வேண்டுமெனக் கேட்டிருக்கிற ஆனந்தசங்கரி, சிவில் நிர்வாக அதிகாரிகள் குறித்தும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்கள் சில முட்டாள்தனமான முடிவுகளை மேற்கொள்வதற்கு உடந்தையாக இருந்தவர்கள் இன்றும் மீண்டும் அதிகார பீடத்திற்கு அமர்த்தப்பட்டள்ளனர். 2004 ஆம் ஆண்டுத் தேர்தலில் புலிகளுக்கச் சாதகமாக 95 சதவீதமான வாக்குகள் கிடைத்தமைக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் கிளிநொச்சி அரசாங்க அதிபர் தற்போது அரசுக்கு ஆலோசனை வழங்கிவருகின்றார் எனவும் விமர்சித்துள்ளார்.

இடம்பெயர்ந்தோரை சரியாக கவனிக்கவில்லை, புனருத்தாரன முகாமிலுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொழிற் பயிற்சிகள் காலத்திற்கு உதவாதவை எனத்தெரிவித்த ஆனந்த சங்ககரி, ‘எனக்கு இப்போது வயது 78. இன்னும் எவ்வளவு காலம் நீடிப்பேன் எனக்கூறமுடியாது. ஆனால் இராணுவததுக்கு பயந்த மக்கள் அவர்களால் எதிர்காலத்தில் இடைஞ்சல்கள் ஏற்படக்கூடும் என்ற பயம் இருக்கும் வரை இன ஒற்றுமை சாத்தியமற்றதாகும்” எனவும் தெரிவித்திரக்கிறார்.

இதே வேளை இராணுவதத்pனர் மிகவும் நல்லவர்கள் எனவும், புலிகள் பயங்கரவாதிகள் எனவும் அவர் குறிப்பிடத்ததவறவில்லை.

-விஜய்

Exit mobile version