Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆண் – பெண் விகிதம் பஞ்சாபில் குறைகிறது : பெண் சிசுக்கொலை காரணம்.

 பெண் சிசுக்கொலையால் பஞ்சாபில் ஆண் – பெண் எண்ணிக்கை விகிதம் வெகுவாக குறைந்தது.

பஞ்சாப் மாநிலத்தில் பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகளே அதிகம் உள்ளனர். கிராமம், நகரம் என எல்லாப்பகுதிகளிலும் பெண் குழந்தைகள் வேண்டாம் என்ற எண்ணம் தலைதூக்கி நிற்கிறது. கடந்த 2001-ம் ஆண்டு இம்மாநிலத்தில் 793 பெண் சிசுக்கொலை நடந்தது.

 இதையடுத்து 2006-ம் ஆண்டு தேசிய குடும்ப நல சர்வே நடத்தப்பட்டது. இதில் பெண் சிசுக்கொலை எண்ணிக்கை 776 ஆக இருந்தது. பெண் சிசுக்கொலை தொடர்ந்து ஏற்படுவதால் ஆயிரம் ஆண்களுக்கு 761 பெண்கள் என்ற நிலை உள்ளது. திருமணத்தின்போது கூடுதல் வரதட்சணை தர வேண்டியுள்ளதால், பெற்றோர், பெண் குழந்தைகளை விரும்புவதில்லை. நாட்டில் உயர் வாழ்க்கைத் தரம் கொண்டதாக உள்ள சண்டிகரில் பெண் – ஆண் விகிதம் 777: 1000 என்ற நிலையில் உள்ளது.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் கமால் ஜீத் கூறுகையில், இன்றைய கால கட் டத்தில் பெண் குழந்தை பிறப்பு என்பது எதிர்காலத் திற்கான மோசமான முதலீடு என கருதுகின்றனர். பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகளே தங்களது வய தான காலத்தில் காப்பாற்றுவார்கள் என பெற்றோர் கரு துகின்றனர் என்றார்.

பெண் சிசுக்கொலை நடுத்தர வருவாய் உள்ள குடும்பங்களிலும், உயர் வருவாய் உள்ள குடும்பங்களிலும், இம் மாநிலத்தில் ஏற்படுகிறது. பெண் சிசுக் கொலைக்கு எதிராக போராடுவோம் என்று டாக்டர் கவுர் கூறினார்.

பெண் சிசுக்கொலையை தடுப்பதற்கு முனைப்புடன் செயல்படும் அவருக்கு, பல்வேறு அரசுகள் விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன. சட்டத்தால் மட்டும் பெண் சிசுக் கொலையை தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Exit mobile version