Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆணுறை குறித்த கருத்துக்களை போப்பாண்டவர் திரும்பப் பெறவேண்டும் என்று கோரிக்கை.

27.03.2009.

போப்பாண்டவர் பெனடிக்ட் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆணுறை பயன்பாடு குறித்த விஞ்ஞானபூர்வ ஆதாரங்களைக் குலைப்பதாய் அமைந்துள்ளதாகவும் அவர் அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் உலகின் முன்னணி மருத்துவ சஞ்சிகை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.

ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் பிரச்சினையை ஆணுறைகள்தான் அதிகமாக்குகின்றன என்று சென்ற வாரம் விமானத்தில் ஆப்பிரிக்கா சென்ற வேளையில், செய்தியாளர்களிடையில் பேசிய போப்பாண்டவர் கூறியிருந்ததை ஆத்திரம் வரவழைக்கும் விதமான மிகவும் தவறான கருத்து என்று லான்செட் சஞ்சிகையின் தலையங்கம் கண்டித்துள்ளது.

இது முன்னெப்போதுமில்லாத வகையில் மிகக் கடுமையான ஒரு தலையங்கம் என்று பிபிசியின் ரோம் நகர செய்தியாளர் கூறுகிறார்.

”பெரும் செல்வாக்குடைய ஒரு நபர், அறிவியல் ரீதியில் பிழையான ஒரு கருத்தை சொல்லும்போது ஏராளமானவர்கள் அதனால் பாதிப்படையக்கூடிய ஆபத்து இருக்கிறது. அவர்கள் தம்முடைய தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும்” என்று லான்செட் தெரிவித்துள்ளது.

BBC

Exit mobile version