Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் நீரடி கேபிள்களைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

25.12.2008.

ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் நீரடி கேபிள்களைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக பிரான்ஸ் டெலிகாம் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாரீஸ் நகரில் இருந்து புறப்பட்ட 64 பேர் கொண்ட சீரமைப்புக் குழு ஞாயிறன்று பராமரிப்பு படகு மூலம் சிசிலி வந்தடைந்தது என்று டெலிகாம் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறினார். நீருக்கடியில் செயல்படக் கூடிய ரோபோட் கடலுக்குள் இறக்கப்பட்டது.

கடலுக்குள் போடப்படும் கேபிள்கள் கப்பல்களின் நங்கூரங்களாலும் பூமி அதிர்வு உள்ளிட்ட பூமியின் விபரீத நிகழ்வுகளாலும் சேதம் அடையக் கூடும். இதன் விளை வாக கேபிள்கள் பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல் லப்பட்டிருக்கக்கூடும். கடலில் இறக்கப்படும் ரோபோட் சேதம் அடைந்த கேபிள்களை படகுக்கு எடுத்து வரும். இந்தக் கண்ணாடி இழைகள் முறையாக இணைக் கப்பட்டு மீண்டும் கடலில் இறக்கப்படும்.

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து ஆசி யாவுக்குள் வரும் இணைப்புகள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளன. வர்த்தக நிறுவன இணைப்புகள் அமெரிக்கா மூலம் திருப்பிவிடப்பட்டுள்ளன. முதல் கேபிள் இணைப்பு டிசம்பர் 25ல் முடிவடையும் என்றும், மற்ற இணைப்புகள் டிசம்பர் 31ல் சீரமைக்கப்படும் என்றும் டெலிகாம் நிறுவனம் கூறியது

Exit mobile version