Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆசியாவில் மிகப்பெரும் செல்வந்தக் குடும்பமாக ராஜபக்ச குடும்பம் : ரனில்

rajapaksafamilyஆசியாவில் மிகப்பெரும் செல்வந்தக் குடும்பமாக ராஜபக்ச குடும்பம் மாறியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவர்கள் தொடர்ந்தும் நாட்டின் வளங்களை சூறையாடியும் ஊழல் மூலமாகவும் பணத்தை சேகரித்து உலகின் மிகப் பெரும் செல்வந்தக் குடும்பமாக மாற முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் எந்த ஒரு அபிவிருத்தி திட்டதினதும் 10 சதவீதமான ராஜபக்ச நிறுவனத்திற்கு கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களின் சொத்துக்கள் மற்றும் வியாபாரங்களையும் கைப்பற்றுவதற்கு ராஜபக்ச குடும்பம் தீவிரம் காட்டி வருவதாக ரனில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version