ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வத்தளை வெலிசர நவலோக மைதானத்தில் இந்த மாநாடு நடைபெற்றது.
யுத்த வெற்றியை ஈட்டிக் கொடுத்த ஏனைய படைத் தளபதிகள் முதல் கடை நிலை சிப்பாய் வரையிலான அனைவரும் சலுகைகளை வழங்கப்பட வேண்டும் என்பதே தமது எண்ணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இராணுவத் தளபதியாகவோ அல்லது கூட்டுப்படைக் கட்டளைத் தளபதியாகவோ அந்த சேவைகளை வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றி இந்த நாட்டின் சகல மக்களுக்கும் உரிமையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் ஆட்சி வகித்த சகல ஆட்சியாளர்களும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அர்ப்பணிப்புடன் போராடிய போதிலும் இராணுவத்தினர் சில நேரங்களில் பின்வாங்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து தலைவர்களும் நாட்டை மீட்டெடுப்பதற்கான யதார்த்தபூர்வமான முனைப்புடன் செயற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் பயங்கரவாதிகளை படையினர் நெருங்கவில்லை எனவும் அதனால் சர்வதேச ரீதியில் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றியின் பின்னர் ஓர் தனிப்பட்ட அரசியல் கட்சி யுத்த வெற்றியை தனது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டம் கட்டமாக யுத்தத்தை காட்டியே தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றியீட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் வகையில் ஆட்சி நடத்துவதே தமது பிரதான இலக்கு என அவர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.