6வது சீன-ஆசியான் பொருட்காட்சியின் அறிவிப்பு பணி சாராம்ச சாதனைகளை பெற்றுள்ளது. இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் ஆசியான் நாடுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. ஆசியான் நாடுகளின் வணிக வர்த்தக தேவைக்கு, இப்பொருட்காட்சி மேலதிக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சீன-ஆசியான் பொருட்காட்சியின் செயலகத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.
இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 6 ஆசியான் நாடுகள் அரங்குகளை உருவாக்க முடிவு செய்தன. தவிர, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா ஆகியவற்றின் 20க்கு அதிகமான தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் என்று அறியப்படுகின்றது.